இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம் உடைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம்

By Ravichandran

மஹிந்திரா நிறுவனம், சில தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் வேரியன்ட்களை இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் (Intelli-Hybrid technology) அறிமுகம் செய்துள்ளனர்.

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இன்டெல்லி-ஹைப்ரிட்...

இன்டெல்லி-ஹைப்ரிட்...

இந்தியாவை மையமாக கொண்டு மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் வேரியன்ட்களை இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது.

இது, தற்போது விற்பனையில் உள்ள மைக்ரோ ஹைப்ரிட் சிஸ்டத்திற்கு (micro-hybrid system) மாற்றாக அமைகிறது.

இந்த இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், முழுக்க முழுக்க மஹிந்திரா நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்டதாகும். இந்த இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம் முதன் முதலாக, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் வழங்கப்படுகிறது.

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்;

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் சிறப்புகள்;

மஹிந்திரா நிறுவனம், வடிவமைத்துள்ள இந்த புதிய ஹைப்ரிட் சிஸ்டம், இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.

இந்த எஸ்யூவியில் உள்ள தற்போதைய மைக்ரோ ஹைப்ரிட் சிஸ்டம், வெறும் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் போல மட்டுமே இயங்குகிறது. ஆனால், இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் போல இயங்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல அனுகூலங்களும் கொண்டுள்ளது.

புதிய இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், பிரேக் எனர்ஜி ரெக்யூபரேஷன், அதிக கெப்பாசிட்டி உடைய பேட்டரி மற்றும் இன்டக்ரேட்டட் ஸ்டார்டர் மோட்டார் (integrated starter motor) ஆகியவற்றை கொண்டுள்ளது.

இந்த மோட்டார் செயல்பாடுகள், ஆல்டர்நேட்டரை போல் இதன் பேட்டரியையும் சார்ஜ் செய்கிறது. வாகன இயக்கத்தின் சில சந்தர்ப்பங்களில் இந்த ஆல்டர்நேட்டர், இஞ்ஜினுக்கு மெல்லிய எலக்ட்ரிக்கல் பூஸ்ட் வழங்குகிறது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

எரிபொருள் திறன்;

எரிபொருள் திறன்;

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் எரிபொருள் திறனை 7% வரை கூட்டுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம் உடைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, இந்தியா முழுவதும் இந்த ஜூலை மாதத்தில் இருந்தே கிடைக்கும்.

கிடைக்கும் வேரியன்ட்கள்;

கிடைக்கும் வேரியன்ட்கள்;

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின், எஸ்4, எஸ்4+, எஸ்4+ 4WD, எஸ்6+, எஸ்8, எஸ்10 4WD ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

விலை;

விலை;

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம் உடைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்10 2WD, 12.48 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் நவி மும்பை) விலையில் விற்கப்படுகிறது.

பொருத்தப்படும் இஞ்ஜின்;

பொருத்தப்படும் இஞ்ஜின்;

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜினில் மட்டுமே பொருத்தப்பட உள்ளது.

பிற மாடல்கள்;

பிற மாடல்கள்;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் மஹிந்திரா நிறுவனம், இந்த இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பிற மாடல்களிலும் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

டெல்லி பகுதிக்கு பொருந்துமா?

டெல்லி பகுதிக்கு பொருந்துமா?

இன்டெல்லி-ஹைப்ரிட் தொழில்நுட்பம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் 2.2 லிட்டர் கொள்ளளவு உடைய எம்ஹாக் டீசல் இஞ்ஜினில் மட்டுமே பொருத்தப்படுகிறது.

இந்த இஞ்ஜின், 140 பிஹெச்பியையும், 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும். இதனால், இதை தற்போதைய வடிவில், டெல்லி வாடிக்கையாளர்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

டெல்லியில் மாசு கட்டுப்பாடு தொடர்பான கட்டுபாடுகள் அமலில் உள்ள நிலையில், டெல்லி வாடிக்கையாளர்களுக்கு என, 1.9 லிட்டர் கொள்ளளவு (140 பிஹெச்பியையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்) இஞ்ஜினில் பொருத்தப்பட வேண்டும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஸ்கார்ப்பியோ பிளாட்ஃபார்மில் தயாராகும் புதிய பொலிரோ, ஸைலோ, குவான்ட்டோ மாடல்கள்!

ஸ்கார்ப்பியோ தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Indian carmaker Mahindra is presenting Scorpio, with brand new mild-hybrid system called 'Intelli-Hybrid Technology'. This will replace current micro-hybrid system found in their SUV. Scorpio with Intelli-Hybrid will be available only on S4, S4+, S4+ 4WD, S6+, S8, S10, and S10 4WD. It improves fuel-efficiency by 7%. It will be available across India from July 2016...
Story first published: Thursday, July 21, 2016, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X