மஹிந்திரா நிறுவனத்தின் 2 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் விரைவில் அறிமுகம்

Written By:

மஹிந்திரா நிறுவனம், 2 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த 2 புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள்;

விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள்;

இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் மஹிந்திரா நிறுவனம், ஏற்கனவே இந்திய வாகன சந்தைகளில், இ2ஓ (E2O) மற்றும் இவெரிட்டோ என்ற பெயர்களில் 2 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஜிஎம் கருத்து;

ஜிஎம் கருத்து;

மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் உயர் அதிகாரியான பவன் சச்தேவா, ஃபேம் இந்தியாவின் 2-வது தேசிய வர்க்ஷாப் மற்றும் கண்காட்சியில் (2nd National Workshop & Exhibition) கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, "மஹிந்திரா நிறுவனம் மேலும் 2 எலக்ட்ரிக் வாகனங்களை, இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பொருத்த வரை, வளைவு மாற்ற புள்ளி (inflexion point) தற்போது அடைந்து விட்டதாகவும், இதனால் இந்த செக்மென்ட்டில் அபரிமிதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜிஎம் கருத்து - 2;

ஜிஎம் கருத்து - 2;

"மேலும், உலக அளவில் இது வரை விற்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களில், 42% வாகனங்கள் 2015-ஆம் ஆண்டில் தான் சாலைகளில் இயங்க ஆரம்பித்தது.

ஆனால் 2015-ல், இந்தியாவில் வெறும் 752 சுத்தமான எலக்ட்ரிக் வாகனங்கள் சாலைகளில் இயங்க தொடங்கியது.

ஆனால், இதே 2015-ல், சீனாவில் 1,76,627 எலக்ட்ரிக் வாகனங்கள் சாலைகளில் இயங்க துவங்கியது. சீனாவின் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும், விற்கும் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் உள்ள ஆர்வத்திற்கு நன்றி கூறியே ஆக வேண்டும்" என பவன் சச்தேவா தெரிவித்தார்.

புதிய தயாரிப்புகள்;

புதிய தயாரிப்புகள்;

மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 2 புதிய எலக்ட்ரிக் வாகனங்களில், முதலாவது வாகனம், இசுப்ரோ (eSupro) அல்லது சுப்ரோ எலக்ட்ரிக் வேன் என்ற வாகனம் ஆகும்.

இது சுப்ரோ வேனின் எலக்ட்ரிக் வேரியன்ட் ஆகும். இந்த சுப்ரோ எலக்ட்ரிக் வேன், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காணப்பட்ட சுப்ரோ எலக்ட்ரிக் வேன், 73.2V ஏசி இன்டக்ஷன் மோட்டார் (73.2V AC induction motor) மூலம் இயங்குகிறது.

இந்த மோட்டார், 40 பிஹெச்பியையும், 90 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

8-சீட்டர்;

8-சீட்டர்;

இசுப்ரோ (eSupro) அல்லது சுப்ரோ எலக்ட்ரிக் வேன் எனப்படும் இந்த வாகனம், 8 பேர் வரை பயணிக்க கூடிய 8-சீட்டர் வாகனம் ஆகும்.

அறிமுகம்;

அறிமுகம்;

மஹிந்திரா இசுப்ரோ (eSupro) அல்லது சுப்ரோ எலக்ட்ரிக் வேன் எனப்படும் இது, விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-வது வாகனம்;

2-வது வாகனம்;

மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ள 2-வது வாகனம் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

எலக்ட்ரிக் கார் தொடர்புடைய செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

சுப்ரோ எலக்ட்ரிக் வேன் - கூடுதல் படங்கள்

சுப்ரோ எலக்ட்ரிக் வேன் - கூடுதல் படங்கள்

சுப்ரோ எலக்ட்ரிக் வேன் - கூடுதல் படங்கள்

English summary
Indian carmaker Mahindra is set to launch two new electric vehicles in India by the end of 2016. Mahindra already sells two electric cars in India, named as the E2O and recently launched eVerito. One of two products expected to be launched is electric variant of the Supro van, called as eSupro. Not much is known about second vehicle from Mahindra. To know more, check here...
Story first published: Friday, July 22, 2016, 11:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark