மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் கூடுதல் திறன்மிக்க மாடல் விரைவில் அறிமுகம்

Written By:

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் கூடுதல் திறன்மிக்க மாடல் இந்த மாதத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய மஹிந்திரா டியூவி300...

தற்போதைய மஹிந்திரா டியூவி300...

மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வழங்கும் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கடந்த செப்டம்பர் 2015-ல் அறிமுகம் செய்யபட்டது.

இது, இந்த நிறுவனம் அறிமுகம் செய்த மாடல்களில், சிறந்த முறையில் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது.

இது சுமார் 6.9 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம், பூனே) விலையில் அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி, 1.5 லிட்டர், எம்ஹாக் கே80, டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 84 பிஹெச்பியையும், 230 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோஷிஃப்ட் எனப்படும் 5-ஸ்பீட் ஏஎம்டி கியர்பாக்ஸுடனும் இணைக்கபட்டுள்ளது.

கூடுதல் திறன்மிக்க டியூவி300...

கூடுதல் திறன்மிக்க டியூவி300...

தற்போதைய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை கூடுதல் திறன்மிக்க மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியாக மாற்ற மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பெறப்பட்டு பொருத்தபடும்.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் இஞ்ஜின், 100 பிஹெச்பியையும், 230 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 17.45 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் கூடுதல் திறன்மிக்க மாடலும், இதற்கு சமமான மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் கூடுதல் திறன்மிக்க மாடல், இந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மாடலின் விலை;

புதிய மாடலின் விலை;

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் கூடுதல் திறன்மிக்க மாடல், தற்போதைய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை காட்டிலும் சுமார் 40,000 கூடுதலான விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிக்கு முன்பதிவு அமோகம்... காரணங்கள் என்ன?

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் 12 முக்கிய சிறப்பம்சங்கள்!!

டியூவி300 தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Mahindra launched their Mahindra TUV300 SUV in September 2015. More powerful model of popular TUV300 SUV is to be launched in this May. More powerful TUV300 will borrow 1.5-litre turbo diesel engine from NuvoSport SUV. This new TUV300 is expected to cost an extra amount of Rs. 40,000. To know more about new Mahindra TUV300, check here...
Story first published: Friday, May 6, 2016, 17:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark