கூடுதல் வசதிகளுடன் வருகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி500!!

Written By: Krishna

ஸ்போர்ட் யுடிலிட்டி வெய்க்கிள் எனப்படும் எஸ்யூவி மாடல் கார்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப காம்பேக்டாகவும், எம்யூவி அம்சங்களுடனும் சந்தைக்கு வந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.

அத்தகைய மாடல்களில், மஹிந்திராவின் எக்ஸ்யூவி 500 காரும் ஒன்று. கிட்டத்தட்ட 80 சதவீதம் முழுமையான ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் மார்க்கெட்டுக்கு வந்த மாடலில், ஒரு சில அம்சங்களில் மட்டும் தானியங்கி வசதி இல்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

அதைப் பூர்த்தி செய்யும் விதமாக சில சிறப்பம்சங்களை எக்ஸ்யூவி 500 டபிள்யூ 10 ஏடி மாடலில் சேர்க்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புஷ் ஸ்டார்ட் பட்டன் எனப்படும் எஞ்சினை ஆன் செய்தவற்கான பொத்தான் அந்த மாடலில் வழங்கப்பட உள்ளது.

இதைத் தவிர கீ லெஸ் என்ட்ரி எனப்படும் ரிமோட் கன்ட்ரோல் சாவிகள் மூலம் கார் கதவுகள், விளக்குளை இயக்கும் வசதியும் டாப் எண்ட் மாடல்களில் கொடுக்கப்படவுள்ளன.

இந்த ஸ்மார்ட் கீ மூலமாக கதவுகளை தூரத்தில் இருந்தே ரிமோட் வாயிலாக லாக் செய்யலாம். அதேபோல், விளக்குகளை ஆன் - ஆஃப் செய்யவும் முடியும். இந்த இரு வசதிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என மஹிந்திரா நிறுவனம் நம்புகிறது. அந்த நம்பிக்கை நிஜமாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதற்கு முன்னால், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடலைப் பற்றிய சிறு அறிமுகம் இதோ உங்களுக்காக...

டிசைனைப் பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்யூவி 500-இன் அதன் வடிவமைப்பு சீட்டா மாடலைப் போன்றதொரு தோற்றத்தைக் கொடுக்கும். பக்கா எஸ்யூவி மாடல் டிசைனாக இருப்பது சிறப்பு. வீல் ஆர்ச்கள் தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

உள்புறத்தைப் பார்க்கும்போது இரண்டு டோன் வடிவமைப்பாக உள்ளது. அதாவது கருப்பு மற்றும் க்ரே ஆகிய கலர்களில் இண்டீரியர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேபின் அதிக எக்ஸ்யூவி-500 இல் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் உள்ளது. 140 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் அதில் உள்ளது. மொத்தம் 6 கியர்கள். ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் உள்ளது.

தில்லியில் 2000 சிசி டீசல் எஞ்சின் கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மட்டும் 1.9 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

சிறப்பம்சங்களை எடுத்துக் கொண்டால், மலைச் சரிவில் பயணிப்பதற்கான கண்ட்ரோல் சிஸ்டம், 6 ஏர் பேக்-கள் ரிவர்ஸ் கியர் கேமரா உள்பட பல்வேறு சிறப்புகள் உள்ளன.

எக்ஸ்யூவி 500 மாடலின் விலை ரூ.12 லட்சம் - 18 லட்சமாக உள்ளது (தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை).

English summary
Mahindra XUV500 AT To Get Push Start Button & Passive Keyless Entry.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark