மஹிந்திரா எக்ஸ்யூவி500 டபுள்யூ6 எஃப்டபுள்யூடி வேரியண்ட்டில், ஏடி அறிமுகம்

Written By:

மஹிந்திரா நிறுவனம், தங்களின் எக்ஸ்யூவி500 டபுள்யூ6 எஃப்டபுள்யூடி வேரியண்ட்டில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யபட்டது.

எக்ஸ்யூவி500-ன் டபுள்யூ6 எஃப்டபுள்யூடி வேரியண்ட்டிற்கு செய்யபட்டுள்ள இந்த புதிய அறிமுகம் பற்றி வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

எக்ஸ்யூவி500 டபுள்யூ6 எஃப்டபுள்யூடி...

எக்ஸ்யூவி500 டபுள்யூ6 எஃப்டபுள்யூடி...

எஃப்டபுள்யூடி என்பது ப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்தை குறிக்கிறது. மஹிந்திரா வழங்கும் எக்ஸ்யூவி500 டபுள்யூ6 எஃப்டபுள்யூடி வேரியண்ட் தற்போது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி) கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 டபுள்யூ6 எஃப்டபுள்யூடி ஏடி வேரியண்ட்டை, தற்போது முதல் அனைத்து மஹிந்திரா ஷோரூம்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம்.

கூடுதல் வேரியண்ட்களில் ஏடி;

கூடுதல் வேரியண்ட்களில் ஏடி;

இது வரை, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி), மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டாப் எண்ட் வேரியண்ட்களான டபுள்யூ8 மற்றும் டபுள்யூ10 ஆகியவற்றில் மட்டுமே கிடைத்து வந்தது.

தற்போது, எக்ஸ்யூவி500 டபுள்யூ6 வேரியண்ட்டிலும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கபடுவது வரவேற்கதக்க விஷயமாகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மஹிந்திரா எக்ஸ்யூவி500, 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 3750 ஆர்பிஎம்களில் 140 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 2800 ஆர்பிஎம்களில் 330 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் இஞ்ஜின் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

மஹிந்திரா எக்ஸ்யூவி500 டபுள்யூ6 எஃப்டபுள்யூடி வேரியண்ட்டில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி) அறிமுகம் செய்யபட்டது குறித்து, மஹிந்திரா உயர் அதிகாரி விவேக் நாயர் மிகுந்த பெருமிதம் வெளியிட்டார்.

"2015-ல் மஹிந்திரா எக்ஸ்யூவி500 அறிமுகம் செய்தது முதல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி) வசதியை மக்கள் ஆர்வத்துடன் ஏற்று கொண்டுள்ளனர். பல்வேறு வேரியண்ட்களில் இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி) இருப்பது, வாடிக்கையாளர்களை புதிய தொழில்நுட்பங்களை உபயோகிக்க வைப்பத்தில் உதவிகரமாக உள்ளது" என விவேக் நாயர் தெரிவித்தார்.

விலை;

விலை;

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (ஏடி), மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டாப் எண்ட் வேரியண்ட்களான டபுள்யூ8 மற்றும் டபுள்யூ10 ஆகியவற்றில் மட்டுமே கிடைத்து வந்தது.

தற்போது, எக்ஸ்யூவி500 டபுள்யூ6 வேரியண்ட்டிலும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கபடுகிறது.

டபுள்யூ8 ஏடி, 15.88 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கபடுகிறது. இதனால், டபுள்யூ6 எஃப்டபுள்யூடி ஏடி சுமார் 1.6 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கும்.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

மஹிந்திரா எக்ஸ்யூவி500, டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8, டபுள்யூ8 ஏடி, டபுள்யூ10 மற்றும் டபுள்யூ10 ஏடி ஆகிய 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஆல்வீல்டிரைவ் எனப்படும் ஏடபுள்யூடி, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ10 ஆகியவற்றில் தேர்வு முறையில் தான் கிடைக்கிறது.

இது புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள டபுள்யூ6 ஏடி-யில் தேர்வு முறையில் கிடைக்காது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அல்ஜீரிய தேச மக்களை அசத்திய மஹிந்திரா எஸ்யூவிகள்!

எக்ஸ்யூவி500 தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Mahindra introduced automatic gearbox for XUV500 W6 FWD (Front Wheel Drive) variant. Price of W6 AT is Rs. 14.29 lakh ex-showroom (Mumbai). XUV500 W6 AT can be booked across Mahindra Dealerships with immediate effect. W8 AT FWD is priced at Rs. 15.88 lakh ex-showroom (Mumbai). So W6 FWD is nearly Rs. 1.6 lakh lesser. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more