பொலிவு கூட்டபட்ட புதிய 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 இந்தியாவில் அறிமுகம்

Written By:

பொலிவு கூட்டபட்ட புதிய 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

புதிய 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800...

புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800...

பொலிவு கூட்டபட்ட புதிய 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800, இந்தியாவில் மாருதி நிறுவனம் வழங்கும் நுழைவு நிலை ஹேட்ச்பேக் காராக உள்ளது.

இது 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800, 2016-ஆம் ஆண்டிற்காக மேம்பாடுகள் செய்யபட்டு அறிமுகம் செய்யபட்டுள்ள மாடல் ஆகும்.

இஞ்ஜின் வகைகள்;

இஞ்ஜின் வகைகள்;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக், பெட்ரோல் இஞ்ஜின் அல்லது சிஎன்ஜி இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக், 3-சிலிண்டர்கள் உடைய 799 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 48 பிஹெச்பியையும், 69 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின், பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்ட மாடல், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.9 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின், சிஎன்ஜி இஞ்ஜின் பொருத்தபட்ட மாடல், ஒரு கிலோகிராம் கேஸ் நிரப்பினால், 33.44 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

டிசைன்;

டிசைன்;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் முக்கியமான மாற்றங்கள், இதன் முன் பகுதியிலும், உட்புறத்திலும் தான் செய்யபட்டுள்ளது.

மாருதி நிறுவனம், இந்த ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் முன் பகுதியில் செய்யபட்ட வடிவமைப்பை நியூ ஏரோ எட்ஜ் டிசைன் (‘new Aero Edge Design') என வெளிபடுத்தி கொள்ள விரும்புகிறது.

முன்னபக்க டிசைன் - 1;

முன்னபக்க டிசைன் - 1;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் முன்பக்கத்தில் உள்ள கிரில் மற்றும் பம்பர் மறுவடிவமைக்கபட்டுள்ளதால், இது கூடுதலான ஸ்போர்ட்டியான தோற்றம் பெற்றுள்ளது.

இதன் முன் பக்கத்தில் நீண்ட மற்றும் மெல்லிய கிரில் வழங்கபட்டுள்ளது. சுஸுகி பேட்ஜ், கிரில் மற்றும் ட்ராபெஸாய்டல் ஏர் டேம் ஆகியவற்றின் இடையில் பொருத்தபட்டுள்ளது.

இதன் கிரில் சிறு மாற்றங்கள் செய்யபட்ட ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. இதுவே இண்டிகேட்டர்களுக்கான யெல்லோ லென்ஸ்கள் கொண்டுள்ளது.

முன்னபக்க டிசைன் - 2;

முன்னபக்க டிசைன் - 2;

ஹெட்லேம்ப்களிடம் இருந்து இண்டிகேட்டர்களை வேறுபடுத்தி காட்டும் நோக்கில், இண்டிகேட்டர்களை சுற்றி குரோம் இன்ஸர்ட்கள் வழங்கபட்டுள்ளது.

டாப் எண்ட் வேரியண்ட்களில், ஃபாக் லேம்ப்களுக்கான இன்செர்ட்கள் தாழ்ந்த ஏர் டேம்-மை சூழ்ந்து கொண்டுள்ளது.

டாப் எண்ட் வேரியண்ட்களில், ரியர் ஸ்பாய்ளர்களும் பொருத்தபட்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் உட்புறத்தில் புதிய சீட் ஃபேப்ரிக்ஸ்கள் வழங்கபட்டுள்ளது.

பின் இருக்கைகளில் அமர்ந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், குடிநீர் பாட்டில்கள் வைப்பதற்கான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கபட்டுள்ளது.

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் டாப் எண்ட் வேரியண்ட்களின் ரியர் சீட்களுக்கு ஒருங்கினைக்கப்பட்ட ஹெட்ரெஸ்ட்கள் பொருத்தபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

பொலிவு கூட்டபட்ட புதிய 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக் மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக், சூப்பீரியர் வைட், சில்கி சில்வர், கிரானைட் கிரே, பிலேசிங் ரெட் போன்ற 4 நிறங்களில் வழங்கபட்டு வந்தது.

தற்போது, மோஜிட்டோ கிரீன் மற்றும் செருலியன் புளூ ஆகிய 2 புதிய நிறங்களிலும் வழங்கபடுகிறது. ஒட்டு மொத்தமாக, 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக் தற்போது 6 நிறங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கில் பயணிக்கும் பாதுக்காப்பானதாகவும், இனிமையாக மாற்றும் வகையில் ஏராளமான அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

(*) அனைத்து வேரியண்ட்களிலும், தேர்வு முறையிலான டிரைவர் பக்க ஏர்பேக்குகள்

(*) ரியர் டோர்களில் சைல்ட் லாக் (டாப் எண்ட் வேரியண்ட்களில் மட்டும்)

(*) பயணியர் பக்க ஓவிஆர்எம் - (அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்)

(*) கீ-லெஸ் எண்ட்ரி (சாவி இல்லாத நுழைவு வசதி)

போட்டி;

போட்டி;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக் காருக்கு, ரெனோ க்விட் மற்றும் விரைவில் வெளியாக உள்ள டட்சன் ரெடி-கோ ஆகிய 2 மாடல்களும் தான் முக்கிய போட்டி மாடல்களாக உள்ளன.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் - ஸ்டாண்டர்ட்

விலை - 2,49,000 ரூபாய்

வேரியண்ட் - ஸ்டாண்டர்ட் (ஓ)

விலை - 2,55,000 ரூபாய்

வேரியண்ட் - எல்எக்ஸ்

விலை - 2,83,000 ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் - எல்எக்ஸ் (ஓ)

விலை - 2,89,000 ரூபாய்

வேரியண்ட் - எல்எக்ஸ்ஐ

விலை - 3,09,000 ரூபாய்

வேரியண்ட் - எல்எக்ஸ்ஐ (ஓ)

விலை - 3,15,000 ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - 3;

விலை விவரங்கள் - 3;

2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் - எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி

விலை - 3,70,000 ரூபாய்

வேரியண்ட் - எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி (ஓ)

விலை - 3,76,000 ரூபாய்

வேரியண்ட் - விஎக்ஸ்ஐ

விலை - 3,28,000 ரூபாய்

வேரியண்ட் - விஎக்ஸ்ஐ (ஓ)

விலை - 3,34,000 ரூபாய்

குறிப்பு ; அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை இமாலய சாதனையை எட்டுகிறது

ஆல்ட்டோ தொடர்புடைய செய்திகள்

மாருதி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Maruti Suzuki has launched their facelifted Alto 800 in India. New 2016 Maruti Suzuki Alto 800 is the Entry-level hatchback from Maruti. Facelifted New 2016 Maruti Alto is available in 6 different colours — Superior White, Silky Silver, Granite Grey, Blazing Red as well as two new colours, Mojito Green and Cerulean Blue. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark