மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை இமாலய சாதனையை எட்டுகிறது

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம், 3 மில்லியன் மாருதி ஆல்ட்டோ கார்களை விற்பனை செய்யும் சாதனையை விரைவில் படைக்க உள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அபார சாதனை குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

அபார சாதனை;

அபார சாதனை;

மாருதி சுஸுகி நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் மாருதி சுஸுகி ஆல்ட்டோ தான் இந்தியாவில் அதிக விற்பனையாகும் மாடலாக விளங்குகிறது.

இது இந்த மாத இறுதி வாக்கில், இந்த 3 மில்லியன் கார்கள் விற்பனை என்ற சாதனையை படைக்க உள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக் மாடல், 16 ஆண்டுகளுக்கு முன்பு 2000-வது ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யபட்டது முதல் தற்போது வரை, மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.

மாருதி நிறுவனம், இந்த ஆல்ட்டோ ஹேட்ச்பேக் மாடலை சரியான செக்மண்ட்டில் வகைபடுத்தியது. அதன் பலன்களை அதிக விற்பனைகளின் ரூபத்தில் தொடர்ந்து பெற்று வருகிறது.

3 தலைமுறைகள்;

3 தலைமுறைகள்;

மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக்கை மாருதி நிறுவனம், 2000-வது ஆண்டில் அறிமுகபடுத்தியது. அப்போது முதல், இந்த மாடலில் 3 தலைமுறை வாகனங்கள் வெளியாகியது.

முதல் முறையாக பொலிவு கூட்டபட்ட 2-வது தலைமுறை மாடல் 2005-ல் வெளியாகியது.

மீண்டும், மேம்பாடுகள் கொண்ட 2-வது தலைமுறை ஆல்ட்டோ ஹேட்ச்பேக் மாடல் 2015-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

ஆல்டோ 800 அறிமுகம்?

ஆல்டோ 800 அறிமுகம்?

இதற்கிடையில், ஹூண்டாய் இயான் மாடலில் இருந்து எழும் போட்டியை சமாளிக்க மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 மாடல் அறிமுகம் செய்யபட்டது.

மாருதி 800-க்கு மாற்று?

மாருதி 800-க்கு மாற்று?

முன்னதாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டிருந்த மற்றொரு மாடலான மாருதி 800-க்கு மாற்றாக தான், இந்த மாருதி ஆல்ட்டோ அறிமுகம் செய்யபட்டது.

இப்படி மாற்றாக வந்த போதிலும், எந்த விதமான சிக்கல்களும் இன்றி தொடர்ந்து நல்ல அளவில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

2 மாடல்களில் அறிமுகம்;

2 மாடல்களில் அறிமுகம்;

மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக், 796 சிசி மற்றும் 1,100 சிசி ஆகிய 2 கொள்ளளவுகளில், 2000-வது ஆண்டில் அறிமுகம் செய்யபட்டது.

ஆனால், இந்த 796 சிசி (800 சிசி) மாடலுக்கு, 2012-ஆம் ஆண்டு வரை எந்த விதமான மாற்றங்களும் செய்யபடவில்லை.

போர் குதிரைகள்!

போர் குதிரைகள்!

தற்போது விற்பனையில் உள்ள இரு மாடல்களுமே (796 சிசி மற்றும் 1,100 சிசி), மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு போர் குதிரைகள் போன்றவையாகும்.

அதிக விற்பனைக்கு உதவும் இந்த 2 மாடல்களும், 3 மில்லியன் கார்களுக்கான விற்பனை சாதனையை வேகமாக நெருங்கி கொண்டிருக்கிறது.

ஏற்றுமதி;

ஏற்றுமதி;

மாருதி நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக், சர்வதேச சந்தைகளில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.

குறிப்பாக, ஜப்பான் நாட்டிற்கு மட்டும் இதுவரை, சுமார் 2,80,000 கார்கள் ஏற்றுமதி செய்யபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

இதன் செக்மண்ட்டில், மாருதி சுஸுகி ஆல்ட்டோ ஹேட்ச்பேக், நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு போட்டியாக ரெனோ க்விட் களம் இறக்கபடுகிறது.

யாருக்கு வெற்றி?

யாருக்கு வெற்றி?

ரெனோவிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்க, மாருதி நிறுவனம் தங்களின் மேம்பட்ட விவரகுறிப்புகளை விரைவில் சேர்க்க வேண்டும்.

ஆரம்பகட்ட அறிகுறிகள் படி, ரெனோ க்விட் நல்ல மாடலாக விளங்குவதால், மாருதி சுஸுகி ஆல்ட்டோவிற்கு திறமையான போட்டி மாடல் உண்டு என்று சொல்லலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி ஆல்ட்டோ காரின் டீசல் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

25 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனை: மாருதி புதிய சாதனை!

மாருதி ஆல்ட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Alto would create a grand milestone when it crosses 3 Million Cars sales mark by this month end. Maruti Suzuki's Alto was introduced 16 years ago during the year 2000. Maruti categorized this Alto in the right segment and reaps benefits continuously. Maruti Alto was brought in initially to replace the Maruti's best-selling Maruti 800.
Story first published: Saturday, February 27, 2016, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X