மாருதி பலேனோ ஸீட்டாவின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

மாருதி பலேனோ ஸீட்டாவின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மாருதி பலேனோ ஸீட்டா ஆட்டோமேட்டிக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மாருதி பலேனோ ஸீட்டா...

மாருதி பலேனோ ஸீட்டா...

மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் பலேனோ மாடலில் ஒரு புதிய ட்ரிம் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தைகளுக்கு, பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் ஸீட்டா-வில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

டெல்டா வேரியண்ட்...

டெல்டா வேரியண்ட்...

முன்னதாக, மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் பலேனோ மாடலில் டெல்டா வேரியண்ட்டில் மட்டும், சிவிடி (Continuously Variable Transmission) வசதியை வெரும் தேர்வு முறையில் மட்டுமே வழங்கி வந்தனர்.

பலேனோ மாடலின் டெல்டா வேரியண்ட், சிவிடி தேர்வை மிதமான விலையில் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காகவே அறிமுகம் செய்யபட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த டெல்டா வேரியண்ட்டின் விலைகளை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதற்காக, இதில் பல்வேறு அம்சங்களை மாருதி நிறுவனம் வழங்காமல் விட்டுவிட்டது.

ஸீட்டா வேரியண்ட்டின் அம்சங்கள்;

ஸீட்டா வேரியண்ட்டின் அம்சங்கள்;

மாருதி பலேனோ ஸீட்டாவின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில், ஆல்லாய் வீல்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், பாக் லேம்ப்கள், ஃபால்லோ மீ பங்க்‌ஷன், டெலெஸ்கோப்பிக் ஸ்டியரிங் காலம்ன், சாவி இல்லாத பிரவேசம் (கீ லெஸ் எண்ட்ரி) ஆகிய வசதிகள் சேர்க்கபட்டுள்ளது.

மேலும், டிரைவர் சைட் அட்ஜஸ்டிபிள் சீட், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், டிஎஃப்டி இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

நெக்ஸா ஷோரும்...

நெக்ஸா ஷோரும்...

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், பிரத்யேகமாக நெக்ஸா ஷோரும்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்யபடுகிறது.

காத்திருப்பு காலம்;

காத்திருப்பு காலம்;

தற்போதைய நிலையில், மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையிலான காத்திருப்பு காலத்துடனேயே கிடைக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் இந்தியாவில் உற்பத்தி செய்யபடுகிறது.

இங்கு உற்பத்தி செய்யபட்டு, இந்திய சந்தைகள் மற்றும் பல்வேறு அயல்நாட்டு சந்தைகளுக்கும் வழங்கபடுகிறது.

போட்டி;

போட்டி;

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

ஆனால், சவால் கொடுக்கும் விலை கொண்டதாலும், மேலும் ஏராளமான ஈர்க்கும் வகையிலான அம்சங்கள் கொண்டுள்ளதாலும், மாருதி பலேனோவிற்கு கட்டாயம் ஏராளமான அனுகூலங்கள் உள்ளது.

விலை;

விலை;

மாருதி பலேனோ ஸீட்டா ஆட்டோமேட்டிக் வேரியண்ட், 7.47 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி பலேனோ காரின் எஞ்சின், மைலேஜ், வசதிகள் விபரம்!

மாருதி பலேனோ கார் நிறைகளும், குறைகளும்!

பலேனோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Maruti Suzuki has launched an all-new trim under their Baleno Premium Hatchback model. This is called as Maruti Baleno Zeta Automatic. It has lots of very advanced features in it. Maruti Baleno Zeta Automatic is priced at Rs. 7.47 lakh ex-showroom (Delhi). To know more about Maruti Baleno Zeta Automatic, check here...
Story first published: Tuesday, April 12, 2016, 18:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark