மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் 1,00,000 புக்கிங்களை கடந்துள்ளது

Written By:

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் 1,00,000 புக்கிங்களை கடந்து வேகமாக முன்னேறி வருகிறது.

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், கடந்த வருடம் தசரா, தீபாவளி பண்டிகைகாலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

அப்போது முதல், கடந்த 4 மாதங்களாக விற்பனையில் இருந்து வருகிறது. அதன் நேரடி போட்டி வாகனமான ஹூண்டாய் ஐ20 காருக்கு கடும் சவால் கொடுத்து வரும் மாருதி பலேனோ, டிசம்பர் மாதத்தில் ஹூண்டாய் ஐ20 மாடலின் தொடர் வெற்றியை முறியடித்தது.

maruti-baleno-premium-hatchback-crossed-100000-bookings

மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கில் பொருத்தபட்ட அதே இஞ்ஜின்களை போன்றே, இந்த பலேனோ ஹேட்ச்பேக்கும், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்கபடுகிறது.

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் சற்று வேகம் கூடிய வேரியண்ட்டாக விளங்கும் 1.2 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் பொருத்தபட்ட மாருதி பலேனோ ஆர்எஸ், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது. இந்த மாருதி பலேனோ ஆர்எஸ் இந்த ஆண்டின் பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

English summary
Bookings for the Maruti Suzuki Baleno premium hatchback has crossed 1,00,000+ Bookings in just 4 months. Baleno was launched during festive season of Dusherra, Diwali last year. The Baleno hatchback is offered with same 1.2-litre petrol engine and 1.3-litre diesel engines as found on Maruti Suzuki Swift hatchback.
Story first published: Wednesday, March 9, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark