மாருதி பலேனோ ஹேட்ச்பேக்கிற்கு 3 ஸ்டார் ரேட்டிங்

By Ravichandran

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் 3 ஸ்டார் ரேட்டிங் பெற்றது.

மாருதி பலேனோவின் கிராஷ் டெஸ்ட் மற்றும் அது பெற்ற மதிப்பீடு குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி பலேனோ...

மாருதி பலேனோ...

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், மாருதி நிறுவனம் வழங்கும் மாடல்களில் மிகவும் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக உள்ளது.

மாருதி பலேனோ, சுமார் 6 மாத காத்திருப்பு காலத்துடனேயே கிடைக்கிறது.

கிராஷ் டெஸ்ட்;

கிராஷ் டெஸ்ட்;

எந்த ஒரு தயாரிப்புகளும், விபத்து நிகழும் நேரத்தில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை ஆராய, கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபடுகிறது.

அதன் பிறகு, சோதிக்கபடும் வாகனங்களுக்கு 1 ஸ்டார், 2 ஸ்டார், 3 ஸ்டார் என மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், குளோபல் என்கேப் (GLOBAL NCAP), ஆசியான் என்கேப் (ASEAN NCAP), யூரோ என்கேப் (EURO NCAP), லேட்டின் என்கேப் (Latin NCAP) என பல்வேறு வகையிலான கிராஷ் டெஸ்ட்கள் உள்ளன.

யூரோ என்கேப்;

யூரோ என்கேப்;

யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட் என்பது ஐரோப்பிய நாடுகளை மையபடுத்தி நடத்தபடும் கிராஷ் டெஸ்ட் ஆகும்.

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்கும், சமீபத்தில் யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தபட்டது.

மாருதி பலேனோ - கிராஷ் டெஸ்ட்;

மாருதி பலேனோ - கிராஷ் டெஸ்ட்;

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், ஃப்ராண்டல் இம்பேக்ட் ஸோன் (முன் திசையில் பாதிப்புகளுக்கு உள்ளாக கூடிய கூடிய பகுதிகள்) மற்றும் சைட் இம்பேக்ட் ஸோன் (பக்கவாட்டில் பாதிப்புகளுக்கு உள்ளாக கூடிய பகுதிகள்) ஆகிய வகைகளில் கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட்டது.

ஒரு வாகனம் எவ்வளவு பாதுகாப்பானதாக உள்ளது என சோதிக்க, இந்த 2016-ஆம் ஆண்டில், யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்களில் ஏராளமான புதிய அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

பலேனோ பெற்ற மதிப்பீடு;

பலேனோ பெற்ற மதிப்பீடு;

மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் 2 வேரியண்ட்கள், யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டின் போது பரிசோதிக்கபட்டது.

ஸ்டாண்டர்ட் பலேனோ, நல்ல மதிப்பீடு என கருதப்படும் 3 ஸ்டார் மதிப்பீடு பெற்றது.

மேலும், தேர்வு முறையிலான பாதுகாப்பு பேக்கேஜ் பொருத்தபட்ட மாருதி பலேனோ, சிறப்பான 4-ஸ்டார் மதிப்பீடு பெற்றது.

ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி;

ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி;

தற்போதைய நிலையில், மாருதி பலேனோ ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடும் மாடல்கள், இந்தியாவில் தயாரிக்கபட்டு ஏற்றுமதி செய்யபடுகிறது.

ஐரோப்பாவுக்கான மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்கில், தேர்வு முறையிலான ரேடார் பிரேக் அசிஸ்ட் தேர்வு வழங்கபட்டுள்ளது. இந்த வசதி தற்போதைய நிலையில் இந்தியாவில் அனுமதிக்கபடுவதில்லை.

டெஸ்ட் செய்யபட்ட மாடல்;

டெஸ்ட் செய்யபட்ட மாடல்;

யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் சோதனை செய்யபட்ட மாருதி பலேனோ மாடல், ட்யூவல் ஃப்ரண்ட் மற்றும் சைட் கர்டெயின் ஏர்பேக்குகள் கொண்டிருந்தது.

இவை, பயணியர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பை வழங்குகிறது.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக், இங்குள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் உட்பட்டு உள்ளது.

விதிமுறைகளில் குறைபாடுகள்;

விதிமுறைகளில் குறைபாடுகள்;

துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் முறைகள் இது வரை கட்டாயமாக்க படவில்லை. மேலும், இங்குள்ள கார்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் தேர்வுமுறையிலேயே வழங்கபடுகிறது.

மாருதி வழங்கும் அம்சங்கள்;

மாருதி வழங்கும் அம்சங்கள்;

கிராஷ் டெஸ்ட் முறைகள், பாதுகாப்பு அம்சங்கள் வழங்குவது கட்டாயமாக்காத் நிலையிலும், மாருதி நிறுவனம், தங்களின் மாருதி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக்கில், ட்யூவல் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் - டென்ஷனர் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாகவே வழங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செவர்லே செயில் செடானுக்கு 0 ஸ்டார் ரேட்டிங்

க்ராஷ் டெஸ்ட்டில் 'மேட் இன் இந்தியா' ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு 4 ஸ்டார் ரேட்டிங்!

கிராஷ் டெஸ்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki's Baleno premium hatchback from Maruti was subjected to Euro NCAP crash test recently. Standard Baleno model secured decent 3-star safety rating. The premium hatchback with an optional safety package, secured 4-star safety rating. To know more about, Maruti Baleno and its rating in Euro NCAP crash test, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X