மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் படங்கள், தொழில்நுட்ப விபரங்கள்!

By Saravana

வரும் 3ந் தேதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் ஆட்டோமொபைல் இணையதளங்களில் கசிந்துள்ளன.

மாருதியிடமிருந்து வரும் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி விட்டாரா எஸ்யூவி பற்றி முதல்முறையாக வெளியாகியிருக்கும் படங்கள், விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

மொத்தம் 6 விதமான வேரியண்ட்டுகளில் புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. Ldi, Ldi(O), Vdi, Vdi(O), Zdi, Zdi+ ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரங்களை காணலாம்.

Photo Credit: Team BHP

எல்டிஐ வேரியண்ட்

எல்டிஐ வேரியண்ட்

இந்த பேஸ் மாடலில், டபுள் பேரல் ஹெட்லைட்ஸ், பம்பரில் இண்டிகேட்டர் விளக்குகள், 15 இன்ச் சக்கரங்கள், எஸ்யூவி தோற்றத்தை உறுதி செய்யும் கருப்பு நிற பாடி கிளாடிங், பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி, டில்ட் ஸ்டீயரிங், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், தானாக கதவுகள் மூடும் வசதி, புளூடூத் இணைப்புடன் கூடிய ஆடியோ சிஸ்டம், டெட் பெடல் ஆகியவை இருக்கும். அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனருக்கான ஏர்பேக் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

Photo Credit: Team BHP

 எல்டிஐ ஆப்ஷனல்

எல்டிஐ ஆப்ஷனல்

முந்தைய எல்டிஐ வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் முன்புறத்தில் சக பயணிக்கான ஏர்பேக், சீட்பெல்ட் ப்ரீ டென்ஷனர் போன்றவை கூடுதலாக இடம்பெற்றிருக்கின்றன.

Photo Credit: Team BHP

விடிஐ

விடிஐ

கருப்பு நிற பில்லர்கள், கருப்பு நிற ரூஃப் ரெயில்கள், பாடி கலர் பம்பர், வீல் கவர்கள், கீலெஸ் என்ட்ரி, பின்புற ஜன்னல்களுக்கான பவர் விண்டோஸ், ரியர் பார்க்கிங் சென்சார், அலாரம், கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் போன்றவை இடம்பெறும்.

விடிஐ ஆப்ஷனல்

விடிஐ ஆப்ஷனல்

இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், டியூவர் ஏர்பேக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

இசட்டிஐ

இசட்டிஐ

டாப் வேரியண்ட்டான இதில், 16 இன்ச் அலாய் வீல்கள், கன்மெட்டல் கிரே ரூஃப் ரெயில்கள், சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட்டுகள், ரியர் வைப்பர், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி பகல் நேர விள்குகல்,பனி விளக்குகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பியானோ பிளாக் பினிஷிங், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், மூட் லைட், உயர்தர ஃபேப்ரிக் இருக்கைகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

இசட்டிஐ ப்ளஸ்

இசட்டிஐ ப்ளஸ்

இருப்பதிலேயே மிகவும் உயர்வகை விட்டாரா பிரெஸ்ஸா வேரியண்ட்டான இதில், இரட்டை வண்ணத்தில் கிடைக்கும். தவிர, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், தானியங்கி வைப்பர்கள், ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்பில்ட் நேவிகேஷன் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல், கூலர் வசதியுடன் க்ளவ் பாக்ஸ் போன்றவை முக்கியமானவையாக இருக்கின்றன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டியூவல் ஏர்பேக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

க்ரெட்டாவுக்கு போட்டி

க்ரெட்டாவுக்கு போட்டி

அதாவது, ஹூண்டாய் க்ரெட்டாவின் வலுவான மார்க்கெட்டை உடைக்கும் விதத்தில், புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் வசதிகளை வாரி வழங்கியிருக்கிறது மாருதி நிறுவனம். மேலும், க்ரெட்டாவை விட விலை குறைவாக வரும் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வாடிக்கையாளரிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki Vitara Brezza images and details surfaced online.
Story first published: Saturday, January 30, 2016, 12:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X