100% வரையிலான கேஷ்பேக் சலுகைகளை வழங்கும் மாருதி சுஸுகி நிறுவனம்

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் கார் மாடல்களின் மீது 100% வரையிலான கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றனர்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி, தங்களின் கார்கள் மீது தள்ளுபடி வழங்கி வருகின்றனர். தற்போது, வாடிக்கையாளர்கள் செலுத்தும் புக்கிங் கட்டணத்தில் இருந்து, 8% கேஷ்பேக் முறையில் திரும்ப கிடைக்கிறது. அதாவது, நீங்கள் 25,000 ரூபாய் செலுத்தினால், உங்களுக்கு 2,000 ரூபாய் கேஷ்பேக்காக மீண்டும் கிடைக்கிறது.

maruti-cashback-discount-offers-savings-on-the-booking-amount

இந்த கேஷ்பேக் சலுகையானது, சில குறிப்பிட்ட மாடல்களின் மீது மட்டுமே கிடைக்கிறது. மாருதி நிறுவனம் வழங்கும் இச்சலுகைகள் செலரியோ டீசல், ஸ்விப்ட் டீசல், ஸ்விப்ட் டிசையர் டீசல், வேகன் ஆர் ஏஎம்டி, எர்டிகா பெட்ரோல் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யபடுவதற்கு முந்தைய ஆல்ட்டோ 800 மீது கொடுக்கபடுகிறது.

தோடு மட்டுமல்லாமல், சில அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கலுக்கு, 100% கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. 25000 ரூபாய் புக்கிங் கட்டணம் செலுத்தும் போது, ஸ்கிராட்ச் கூப்பன்கள் உபயோகிக்கும் பட்சத்தில், இந்த கேஷ்பேக் சலுகைகளை பெற வாய்ப்புகள் உள்ளது. எனினும், இந்த ஆஃபரை பயன்படுத்தி கொள்ள, கார்களை ஜூன் 15-ஆம் தேதிக்கு முன்னதாக புக்கிங் செய்ய வேண்டும், அத்துடன் கார்களின் டெலிவரியை, ஜூன் 30-ஆம் தேதிக்குள் பெற்று கொள்ள வேண்டும்.

maruti-cashback-discount-offers-savings-on-booking-amount

எந்த எந்த கார் மாடல்கள் மீது அதிக்கப்படியாக எவ்வளவு சலுகைகள் கிடைக்கிறது என விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆல்ட்டோ கே10 (ஏஎம்டி) - 59,100/- ரூபாய்

செலரியோ (ஏஎம்டி) - 59,100/- ரூபாய்

ஆல்ட்டோ 800 (பழைய மாடல்) - 82,100/- ரூபாய்

ஸ்விப்ட் டீசல் - 62,000/- ரூபாய்

ஸ்விப்ட் டிசையர் (டீசல்) - 52,100/- ரூபாய்

எர்டிகா (பெட்ரோல்) - 50,100/- ரூபாய்

* இந்த அதிகப்படியான தள்ளுபடிகள் அனைத்தும், கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் மற்றும் கேஷ் டிஸ்கவுன்ட்களை உபயோகிக்கும் போது கிடைக்கும்.

maruti-cashback-discount-offers-savings-in-booking-amount
English summary
Maruti Suzuki is in discount act and offers new car buyers, 8 per cent cash back on Booking Amount paid. If you're paying Rs. 25,000 booking amount, you could save up to Rs. 2,000. This cashback offer is currently valid only on models such as Celerio diesel, Swift diesel, Swift Dzire diesel, Alto K10 AMT, Wagon R AMT, Ertiga petrol and pre-facelifted Alto 800. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark