விற்பனையில் தெறி காட்டும் மாருதி விடாரா பிரேஸா... 5 மாதங்களில் 95,000 புக்கிங்...!!

Written By: Krishna

தொட்டதை எல்லாம் பொன்னாக மாற்றும் மிதாஸின் கைகளைக் கடனாக வாங்கியிருக்கிறது போல மாருதி நிறுவனம். ஸ்விஃப்ட், ஆல்ட்டோ, சியாஸ் என கடந்த சில ஆண்டுகளில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய அத்தனை மாடல்களும் செம ஹிட்.

அந்த வரிசையில் இப்போது விட்டாரா பிரேஸாவும் இணைந்துள்ளது. அறிமுகமான 5 மாதங்களுக்குள் 95,000 புக்கிங்குகள் அந்த காருக்கு வந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மாருதிடா..... என கபாலி ரேஞ்சுக்கு மாஸ் காட்டி கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். காம்பேக்ட் எஸ்யூவி மாடலான பிரேஸாவில் பல சிறப்பம்சங்கள் இருந்ததும், அதன் வடிவமைப்பு வாடிக்கையாளர்களை ஈர்த்ததுமே அதன் வெற்றிக்குப் பின்னால் உள்ள காரணமாகக் கருதப்படுகிறது.

ஹிட்டடித்தற்கு அப்படி என்னென்ன அம்சங்கள் விட்டாரா பிரேஸாவில் உள்ளன? என்பதை அறிய ஓர் சிறிய அறிமுகம்...

 டிசைன்

டிசைன்

கடந்த மார்ச் மாதம் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான விடாரா பிரேஸா மாடலை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், அதன் தோற்றம்தான் முதலில் கண் முன்னே வந்து நிற்கிறது. காம்பேக்ட் காராக அல்லாமல் பார்க்க பிரம்மாண்டமான எஸ்யூவி மாடலைப் போன்றதொரு லுக்கைத் தருகிறது.

குறைவான விலை

குறைவான விலை

அடுத்தது விலையைப் பார்த்தால், இந்த செக்மெண்ட் கார்களில் சற்று குறைந்த விலை காராக மாருதி விடாரா பிரேஸா உள்ளது. ரூ.6.99 லட்சத்திலிருந்து விலை ஆரம்பமாகிறது. ஃபுல்லி லோடட் மாடல் ரூ.9.68 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது (தில்லி எக்ஸ் ஷோ ரூமின் விலை).

இடவசதி

இடவசதி

உள்புறத்தில் இரண்டு டோன் கலர்களில் இன்டீரியர் செய்திருப்பது, விலாசமான இருக்கை வசதி, குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான இட வசதி உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாடலின் ஹைலைட்.

நவீன வசதிகள்

நவீன வசதிகள்

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாமாக இயங்கும் முகப்பு விளக்குகள், சாவி இன்றி வாகனம் இயக்கும் வசதி, ஆட்டோமேடிக் வின்ட்ஷீல்டு வைப்பர் (முகப்புக் கண்ணாடி துடைப்பான்), தானியங்கி வெப்பநிலை மாற்ற வசதி உள்ளிட்டவை விடாரா பிரேஸாவின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் சிறப்பு அம்சங்கள்.

எஞ்சின்

எஞ்சின்

1.3 லிட்டர் டிடிஐஎஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 89 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட எஞ்சின் அது. மைலேஜைப் பொருத்தவரை லிட்டருக்கு 24.3 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என்றும் மாருதி நிறுவனம் உறுதி அளிக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. எஸ்யூவி ரக கார்களில் மிக சிறப்பான மைலேஜை வழங்குவதும் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவு

எஸ்யூவி ரக கார்களில் குறைவான பராமரிப்பு செலவு கொண்ட மாடல் என்ற நம்பிக்கையும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, எஸ் க்ராஸ் போன்று பிரிமியம் மாடலாக விளம்பரம் செய்யாமல், தனது சாதாரண டீலர்கள் வாயிலாகவே விற்பனை செய்வதும் வாடிக்கையாளர்களை ஈர்க்க காரணம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு இமாலய புக்கிங்!

எரிபொருள் டேங்க்கின் கொள்திறன் 48 லிட்டராக இருப்பது நெடுந்தூரப் பயணத்துக்கு சாதகமான அம்சம். லிட்டருக்கு 20 கிமீ வரை மைலேஜ் தரும் என்பதால், ஃபுல் டேங்க் அடித்தால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்று திரும்பி விடலாம்.

சிறிய குறை

சிறிய குறை

டீசல் எஞ்சின் மாடல் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. பெட்ரோல் மாடல் இந்த காரில் இல்லை என்பது ஒரு குறை. மொத்தத்தில் விடாரா பிரேஸாவும் மார்க்கெட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதில் திக்கு முக்காடிப் போயிருக்கிறது மாருதி நிறுவனம்.

 
English summary
Maruti Dealers Record Phenomenal Bookings For Vitara Brezza.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark