க்விட் தந்த தாக்கத்தால் புதிய மாருதி ஆல்ட்டோ தயாராகிறது - முழு விவரம்

By Ravichandran

அடுத்த தலைமுறை புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோ தயாராகி வருகிறது. ரெனோ க்விட் ஹேட்ச்பேக்கின் வேகமான எழுச்சி காரணமாகவே இந்த புதிய மாருதி ஆல்ட்டோ தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய மாருதி ஆல்ட்டோ ஹேட்ச்பேக் தொடர்புடைய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

க்விட் தந்த தாக்கத்தால் புதிய மாருதி ஆல்ட்டோ தயாராகிறது - முழு விவரம்

இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் கார்களில், மாருதி சுஸுகி ஆல்ட்டோ தான் ராஜா போல் திகழ்கிறது. ஒரு மாதத்தில் சுமார் 18,000 முதல் 19,000 கார்கள் வரை விற்பனையாகிறது.

அதே நேரத்தில், ரெனோ நிறுவனம், ஒரு மாதத்தில் சுமார் 10,000 கார்களை விற்பனை செய்கிறது. மாருதி ஆல்ட்டோவோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை குறைவானதாக உள்ளது.

க்விட் தந்த தாக்கத்தால் புதிய மாருதி ஆல்ட்டோ தயாராகிறது - முழு விவரம்

எனினும், ரெனோ க்விட் விற்பனையாகும் வேகம், மாருதி ஆல்ட்டோவின் விற்பனை வேகத்தை விட அதிகமாக உள்ளது.

இதனுடைய மேம்பட்ட அம்சங்களின் காரணமாக, வாடிக்கையாளர்கள் ரெனோ க்விட்டை விரும்பி தேர்வு செய்கின்றனர்.

க்விட் தந்த தாக்கத்தால் புதிய மாருதி ஆல்ட்டோ தயாராகிறது - முழு விவரம்

ஆனால், வாடிக்கையாளர்கள் மாருதி ஆல்ட்டோவை தேர்வு செய்வதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. மாருதி நிறுவனம், மிக விரிவான விற்பனை (சேல்ஸ்) மற்றும் சர்வீஸ் நெட்வர்க் கொண்டுள்ளது.

எனினும் மாருதி நிறுவனம், தங்களின் ஆல்ட்டோவிற்கு பொலிவு கூட்ட வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்ந்த காரணத்தால், அடுத்த தலைமுறை புதிய மாருதி சுஸுகி ஆல்ட்டோவை தயார் செய்து வருகின்றனர்.

க்விட் தந்த தாக்கத்தால் புதிய மாருதி ஆல்ட்டோ தயாராகிறது - முழு விவரம்

கிராஸ்ஓவர் மாடல் இந்திய வாடிக்கையாளர்களிடையே மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. இதற்கு, வாடிக்கையாளர்கள் க்விட்டை அதிக அளவில் தேர்வு செய்வதே முக்கிய சாட்சியாக உள்ளது.

மாருதி நிறுவனமும், சிறிய ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், க்விட்டை போன்ற ஒரு மாடலை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்விட் தந்த தாக்கத்தால் புதிய மாருதி ஆல்ட்டோ தயாராகிறது - முழு விவரம்

சுஸுகி நிறுவனம், ஜப்பானில் ஆல்ட்டோவை, 660சிசி இஞ்ஜின் கொண்ட வேறு ரூபத்தில் விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனம், ஜப்பானில் விற்கப்படும் ஆல்ட்டோவிடம் இருந்து ஏராளமான விவரக்குறிப்புகளை ஏற்று கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியர்களின் எஸ்யூவி சென்டிமென்ட் மற்றும் கிராஸ்ஓவர் லுக்-கையும் மனதில் வைத்து கொண்டு, இந்த மாருதி ஆல்ட்டோ உருவாக்கப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

மாருதி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki is developing Next-Gen Maruti Alto Hatchback. Maruti Suzuki Alto is undisputed king in best-selling cars in India and sells around 18,000 to 19,000 units. Renault, on other hand, sells close to 10,000 units of the Kwid which is lesser than Alto. Maruti acknowledge that Alto needs an overhaul and is developing next-generation of Alto. To know more, check here...
Story first published: Thursday, September 1, 2016, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X