ஹோண்டா சிட்டியை வீழ்த்திய மாருதி சியாஸ்... விற்பனையில் முதலிடம்....!!

By: Meena

செடான் ரக சொகுசு கார்களில் ஹோண்டா சிட்டிதான் மார்க்கெட் லீடராக இருந்தது. இப்போது அந்த நிலைமை கொஞ்ச கொஞ்சமாக மாறி வருகிறது.

பட்ஜெட்டில் குடும்பம் நடத்துபவர்கள் கார் வாங்க விரும்பினால், அவர்களது முதல் சாய்ஸ் மாருதிதான். மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களின் நம்பிக்கைகுரிய கார்களாக மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்ளன எனலாம்.

மாருதி சியாஸ்

ஆனால், ஹேட்ச்பேக் மற்றும் ஏ-செக்மெண்ட் மாடலோடு மற்றும் நிற்காமல் அந்நிறுவனம், ப்ரீமியம் கார் மார்க்கெட்டிலும் கால் வைத்து ஒரு முன்னோட்டம் பார்த்தது. கிஜாஸி, கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட பிரீமியம் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த முயற்சியால் மாருதி நிறுவனம் சூடு போட்டுக் கொண்டதுதான் மிச்சம்.

அந்த இரண்டு மாடல்களுமே பக்கா ஃபெயிலர். விடா முயற்சியுடன் மீண்டும் கோதாவில் குதித்தது மாருதி நிறுவனம்.

இந்த முறை சியாஸ் என்ற பெயரில் பிரீமியம் காரை அறிமுகப்படுத்தியது. அந்த செக்மெண்டில் தனி சாம்ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கும் ஹோண்டா சிட்டிக்கு எதிராக சியாஸ் மாடல் கடந்த 2014-ஆம் ஆண்டு களமிறக்கப்பட்டது.

இதுவும் தோல்வியில் முடியலாம் என நினைத்திருந்த நிலையில், மெதுவாக பிரீமியம் கார் செக்மெண்டில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட மாருதி சியாஸ், தற்போது விஸ்வரூபம் எடுத்து விற்பனையில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஆமாங்க... இதுவரை 1 லட்சம் கார்களுக்கு மேல் மாருதி சியாஸ் மாடல் விற்பனையாகியுள்ளன. செடான் கிளாஸ் கார் மார்க்கெட்டில் புதிய அத்தியாயம் படைத்ததுடன், விற்பனையில் முதலிடத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது சியாஸ்.

கடந்த மாதத்தில் மொத்தம் 5,188 சியாஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹோண்டா சிட்டி 3,305 கார்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த இரு ஆண்டுகளில் மொத்தம் 18,000 சியாஸ் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதும் மாருதிக்கு புதிய எனர்ஜியைக் கொடுத்துள்ளது.

ஹோண்டா சிட்டியின் விற்பனையை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிய அவதாரத்தை சியாஸ் எடுத்திருப்பது மாருதி நிறுவனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து முதலிட்ட சியாஸ் தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Maruti Sells 1 Lakh Units Of Ciaz; Will It Topple The Honda City?.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark