பாதுகாப்பு அம்சங்களை அலட்சியப்படுத்தும் மாருதி வாடிக்கையாளர்கள்!

By Meena

நமது அறிவார்ந்த மக்களிடம் கூடவே பிறந்த குணம் ஒன்று உள்ளது... எந்தத் தவறாக இருந்தாலும் சரி... அதற்கு அடுத்தவர் மேல் பழி சொல்வது.. அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இல்லாததற்கும், பொது இடங்களில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கும் காரணம் ஆட்சியில் இருப்பவர்கள்தான் என்று குற்றம்சாட்டியே பழகிவிட்டோம்.

சாலை விபத்துகள் அதிகமாக நேர்வதற்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்கும் அரசுதான் காரணம் என்றும் பலர் பழி சுமத்துகின்றனர். ஆட்சியாளர்களின் கடமை தவறிய செயல்கள் ஒரு புறம் இருக்கட்டும்... நம்மில் எத்தனை பேர் சட்டத்தை மதிக்கும் குடிமகன்களாக இருக்கிறோம்? தலைக்கவசம் அணிகிறோமா? சிக்னலை மதிக்கிறோமா? சாலையில் இருக்கும் எச்சரிக்கை விதிகளை கடைப்பிடிக்கிறோமா? இதெல்லாம் இல்லை. ஆனால் பிறரைத் தூற்றுவதில் மட்டும் அலாதிப் பிரியம் கொண்டிருக்கிறோம்.

மாருதி கார் வாடிக்கையாளர்கள்

நம் மக்கள் வாகனங்களில் செல்லும்போது, எந்த அளவுக்கு தங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது குறித்து வெளியான சமீபத்திய ரிப்போர்ட் ஒன்று அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

அதாவது மாருதி நிறுவனம் தயாரித்துள்ள கார்களில் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள ஏர் பேக்-களை வாங்குவதற்கு எத்தனை வாடிக்கையாைளர்கள் முன்னுரிமை தருகிறார்கள் என்பது குறித்த சர்வேதான் அது.

பலேனோ, விட்டாரா பிரேஸா, எஸ் கிராஸ் உள்ளிட்ட மாடல்களில் இலவச இணைப்பாகவே இந்த ஏர் பேக்-கள் வருகின்றன. அதைத் தவிர பிற மாடல்களில் வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

மொத்தமாகவே 37 சதவீத மாருதி வாடிக்கையாளர்கள் மட்டுமே ஏர் பேக் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளனராம். இத்தனைக்கும் ஓட்டுர் இருக்கையில் பொருத்தப்படும் ஏர் பேக்கின் விலை வெறும் ரூ.6000 தான். மாருதியின் ஒட்டுமொத்த விற்பனையில் 17 சதவீதத்துக்கும் மேல் இருப்பது ஆல்ட்டோ மாடல்கள்தான்.

அந்த மாடலைத் தேர்வு செய்யும் 95 சதவீத வாடிக்கையாளர்கள் ஏர் பேக்-களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறுகிறது அந்தப் புள்ளிவிவரம். வெளிப்புறத் தோற்றத்துக்கும், ஆடியோ சிஸ்டத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அளிக்கும் நமது முற்போக்கு சமூகம், சுய பாதுகாப்புக்காக எதையும் செய்வதில்லை. ஏன், இன்ஷுரன்ஸ் கூட புதுப்பிப்பதில்லை.

மக்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு அதிகரித்தால் மட்டுமே சாலை விபத்துகள் குறையும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Customers Not Interested In The Most Important Features.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X