ரூ.70,000 வரை சேமிப்பு... மாருதி கார்களை வாங்க இதுவே சரியான தருணம்!

Written By:

தீபாவளி பண்டிகையையொட்டி, மாருதி கார்களுக்கு அதிரடி சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புச் சலுகைகளை பயன்படுத்தி மாருதி காரை சொந்தமாக்கிக் கொள்ள இந்த ஆண்டின் மிகச் சரியான தருணமாக இதனை குறிப்பிடலாம்.

மாருதி நிறுவனத்தின் பட்ஜெட் கார் மாடல்களுக்கு சிறப்பான சலுகைகளை பெற முடியும். எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை தொடர்ந்து காணலாம்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

மாருதியின் மிக குறைந்த விலை கார் மாடலும், விற்பனையில் இந்தியாவின் நம்பர் 1 கார் மாடலாகவும் வலம் வரும் ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.35,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். இதில், ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 வரை பழைய கார் மாடலை மாற்றி ஆல்ட்டோ 800 காரை வாங்குவோரும் சிறப்புச் சலுகையாகவும் பெறலாம்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

அடுத்து, ஆல்ட்டோ 800 காரின் பழைய மாடலுக்கு ரூ.50,000 வரை சேமிக்க முடியும். இதில், ரூ.30,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 பழைய காரை மாற்றுவோருக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையாகவும் பெறமுடியும்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

மாருதி ஆல்ட்டோ காரின் சக்திவாய்ந்த மாடலான கே10 காருக்கும் சிறப்பு சலுகைகளை பெற முடியும். இந்த காரை வாங்குவோர் ரூ.35,000 வரை சேமிக்கும் வாய்ப்புள்ளது. ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

மாருதி செலிரியோ காருக்கு ரூ.40,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இப்போது உளளது. செலிரியோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட Vxi மற்றும் Zxi மாடல்களுக்கு ரூ.20,000 நேரடி தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாக பெறும் வாய்ப்புள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கும் ரூ.15,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

மாருதி ரிட்ஸ் காருக்கு ரூ.65,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். ரிட்ஸ் காரின் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டுக்கு ரூ.25,000 தள்ளுபடியும், விஎக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் மற்றும் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்டுகளுக்கு ரூ.15,000 விலையில் நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய காரை மாற்றுவோர் அதிகபட்சமாக ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனசாக பெற முடியும்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

மாருதி ஸ்விஃப்ட் காருக்கும் சேமிப்புச் சலுகைகள் உண்டு. இந்த காருக்கு ரூ.25,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. இதில், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் செடான் மாருதி டிசையர். இந்த காருக்கு ரூ.25,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறலாம்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

மாருதி வேகன் ஆர் காருக்கு ரூ.55,000 வரையில் சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. பெட்ரோல் மாடலுக்கு ரூ.20,000 வரையிலும், சிஎன்ஜி மாடலுக்கு ரூ.15,000 வரையிலும் நேரடி தள்ளுபடி பெறலாம். பழைய காரை மாற்றுவோருக்கு ரூ.35,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காருக்கு ரூ.70,000 வரை சேமிப்பு சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. எல்எக்ஸ்ஐ மற்றும் எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.35,000 வரையிலும், ஆட்டோகியர்ஷிஃப்ட் வசதி கொண்ட விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.20,000 வரையிலும் தள்ளுபடி பெறலாம். பழைய காரை மாற்றும்போது அதிகபட்சமாக ரூ.35,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெற முடியும்.

 மாருதி கார்கள் மீது ரூ.70,000 வரை அதிரடி சலுகைகள்!

குறிப்பு: சலுகைகள் விபரத்தை அருகாமையிலுள்ள மாருதி டீலரில் கேட்டு தெரிந்துகொள்ளவும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடலாம்.

English summary
Maruti Suzuki Showering Discounts During Diwali — Read the Complete Details in Tamil.
Story first published: Tuesday, October 18, 2016, 17:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark