மாருதி சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ மாடலின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ மாடலுடைய ஆட்டோமேட்டிக் வேரியண்ட், குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி சுஸுகி சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் இஞ்ஜினில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை.

இந்த மாடல், அதே 1.4 லிட்டர், 4-சிலிண்டர் மோட்டார் கொண்டுள்ளது. இது 91 பிஹெச்பியையும், 130 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

4-ஸ்பீட் யூனிட்டில் முன்பு கிடைத்து வந்த அதே கியர்பாக்ஸ் தான், இந்த மாருதி சுஸுகி சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிலும் உள்ளது.

இது முன்னதாக, விஎக்ஸ்ஐ+ மற்றும் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்களில் மட்டுமே கிடைத்து வந்தது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

இதன் போட்டி மாடல்களை காட்டிலும், மாருதி சுஸுகி சியாஸ் மாடலின் வீல்பேஸ் நீண்டதாகவும், பெரிய கேபின் அளவு கொண்டதாகவும் உள்ளது.

இது வரை, வாடிக்கையாளர்கள் இழந்து வந்து கொண்டிருந்த ஏராளமான பிரிமியம் அம்சங்கள், தற்போது வெளியிடபட்டுள்ள மாருதி சுஸுகி சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் சேர்க்கபட்டுள்ளது.

மாருதியின் குறிக்கோள்;

மாருதியின் குறிக்கோள்;

நீண்ட காலமாக, மிட்-சைஸ் செடான்கள் ரக வாகனங்களில், ஹோண்டாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹோண்டாவின் இந்த ஆதிக்கத்தை குறைத்து, அந்த இடத்தை மாருதி நிறுவனம் பிடிக்க நினைக்கிறது.

இதனால், எக்சிக்யூட்டிவ் செக்மண்ட்டில் சியாஸ் மாடலை முன்னிலைபடுத்தி, மாருதி சுஸுகி நிறுவனம் பெரிய அளவில் மார்கெட்டிங் செய்து வருகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

மாருதி சுஸுகி சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட், ரியர் வெண்ட் ஏசி, விண்ட்ஸ்கிரீனில் கூடுதல் ஷேட் மற்றும் ரீடிங் (படிப்பதற்கான) விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது.

இதில், அதிகப்படியான சொகுசு உணர்வை வழங்கும் வகையிலான லெதர் சீட்கள் கொண்டுள்ளது.

கிடைக்கும் வேரியண்ட்கள்;

கிடைக்கும் வேரியண்ட்கள்;

மாருதி சுஸுகி சியாஸ் மாடலில், விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஓ), விஎக்ஸ்ஐ+, விஎக்ஸ்ஐ+ ஏடி, இசட்எக்ஸ்ஐ+, இசட்எக்ஸ்ஐ+ ஆர்எஸ், இசட்எக்ஸ்ஐ+ ஏடி, விடிஐ எஸ்ஹெச்விஎஸ், விடிஐ (ஓ) எஸ்ஹெச்விஎஸ், இசட்டிஐ எஸ்ஹெச்விஎஸ், இசட்டிஐ+ எஸ்ஹெச்விஎஸ், இசட்டிஐ+ எஸ்ஹெச்விஎஸ் ஆர்எஸ் ஆகிய ஏராளமான வேரியண்ட்கள் கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

விலை;

விலை;

மாருதி சுஸுகி சியாஸ் இசட்எக்ஸ்ஐ+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை, 10.19 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்க முடிவு செய்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி சியாஸ் ஆர்எஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

மாருதி சியாஸ் ஹைபிரிட் மாடல் விற்பனைக்கு வந்தது - விலை, மைலேஜ் விபரம்!

மாருதி சியாஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Maruti Suzuki has launched the Ciaz ZXi+ Automatic variant recently. Maruti Suzuki Ciaz ZXi+ Automatic variant competes with Honda City, Skoda Rapid, Volkswagen Vento and the Hyundai Verna. The ZXi+ is released with lots of premium features, which the customers had missed until now. It is priced at Rs. 10.19 lakh ex-showroom (Delhi).
Story first published: Friday, February 26, 2016, 16:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark