மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் சலுகைகள், தள்ளுபடிகள் - முழு விவரம்

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், இந்த ஜூலை மாதத்தின் போது, தங்களின் பல்வேறு கார் மாடல்கள் மீது ஏராளமான சலுகைகளை வழங்குகின்றனர்.

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் சலுகைகள் குறித்த முழு விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதியின் சலுகைகள்;

மாருதியின் சலுகைகள்;

தற்போதைய நிலையில், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக உள்ளது.

அப்படி இருந்தும், மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் பல்வேறு தயாரிப்புகள் மீது ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றனர். பிற கார் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எழும் போட்டியை சமாளிக்கவே இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய கால சலுகைகள்;

குறுகிய கால சலுகைகள்;

மாருதி சுஸுகி நிறுவனம், மொத்தம் 8 மாடல்கள் மீது, இந்த ஜூலை 2016-ல் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்குகின்றது.

இந்த சலுகைகளும், தள்ளுபடிகளும், 10,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையில் வேறுபடுகிறது.

குறுகிய கால சலுகைகளாக வழங்கப்படும் இவை, சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில் மட்டும், ஸ்டாக்குகள் உள்ளவரை மட்டுமே கிடைக்கும்.

ஆல்ட்டோ 800, கே10;

ஆல்ட்டோ 800, கே10;

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் கே10 மாடல்கள் 15,000 ரூபாய் மதிப்புடைய கேஷ் டிஸ்கவுன்ட் எனப்படும் ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த 2 மாடல்கள் மீது, 20,000 ரூபாய்க்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள், டீலர்ஷிப்பிடம் கிடைக்கும் எந்த விதமான இஞ்ஜின் தேர்வுகள் மீது வேண்டுமானாலும் கிடைக்கும்.

செலரியோ;

செலரியோ;

மாருதி செலரியோ காரின் பெட்ரோல் மாடல் மீது 10,000 ரூபாய் மதிப்பிலான கேஷ் டிஸ்கவுன்ட்டும், டீசல் மாடல் மீது 25,000 ரூபாய் மதிப்பிலான கேஷ் டிஸ்கவுன்ட்டும் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த 2 மாடல்கள் மீதும், 20,000 ரூபாய்க்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

வேகன் ஆர்;

வேகன் ஆர்;

பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட மாருதி சுஸுகி வேகன் ஆர் மீது 25,000 மதிப்புடைய கேஷ் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த 2 மாடல்கள் மீது 35,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கிடைக்கிறது.

வேகன் ஆர் - சிஎன்ஜி;

வேகன் ஆர் - சிஎன்ஜி;

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் வேகன் ஆர் மாடலின் ஆட்டோமேட்டிக் மற்றும் சிஎன்ஜி மாடல்கள் மீது 35,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும், 20,000 ரூபாய் மதிப்புடைய கேஷ் டிஸ்கவுன்ட்டும் கிடைக்கும்.

ஸ்விப்ட், ஸ்விப்ட் டிசையர்;

ஸ்விப்ட், ஸ்விப்ட் டிசையர்;

மாருதி நிறுவனம், தங்களின் ஸ்விப்ட் மற்றும் ஸ்விப்ட் டிசையர் மாடல்கள் மீது 10,000 ரூபாய் மதிப்பிலான கேஷ் டிஸ்கவுன்ட் வழங்குகிறது.

இந்த ஹேட்ச்பேக் மற்றும் காம்பேக்ட் செடான் மீது 15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கிடைக்கும்.

சியாஸ்;

சியாஸ்;

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட மாருதி சியாஸ் செடான் மீது 15,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது.

மேலும், டீசல் இஞ்ஜின் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட மாருதி சியாஸ் செடான் மாடல்கள் மீது 30,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை வழங்கப்படுகிறது.

எர்டிகா எம்பிவி;

எர்டிகா எம்பிவி;

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் எர்டிகா எம்பிவி மீது 20,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கப்படுகிறது.

டீசல் இஞ்ஜின் கொண்ட மாருதி எர்டிகா எம்பிவி மீது 15,000 ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை வழங்கப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆல்ட்டோ தொடர்புடைய செய்திகள்

மாருதி தொடர்புடைய செய்திகள்

மாருதி சுஸுகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Japan based car manufacturer Maruti Suzuki continues to provide offers and benefits on several models. For month of July 2016, Maruti Suzuki is offering discounts and benefits on 8 models. Offer and discounts range from Rs. 10,000 to Rs. 35,000. Offers are available on limited stocks and can be availed for limited period at certain Maruti Suzuki dealerships...
Story first published: Thursday, July 7, 2016, 13:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark