மாருதி சுஸுகி நிறுவனத்தின் மழைகாலத்திற்கு முந்தைய சர்வீஸ் முகாம்கள் துவக்கம்

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், 'மான்சூன் ஃபிட் செக்கப் கேம்ப்' என்ற மழைகாலத்திற்கு முந்தைய சர்வீஸ் முகாம்களை நடத்துகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் இந்தியா அளவில் மிக விரிவான சர்வீஸ் நெட்வர்க் கொண்டுள்ளது.

maruti-suzuki-monsoon-fit-checkup-camp-2016-across-india-held

மாருதி நிறுவனத்தின் 'மான்சூன் ஃபிட் செக்கப் கேம்ப்', ஜூன் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இந்தியாவில் உள்ள மொத்தம் 1,714 மாருதி நிறுவனத்தின் ஷோரூம்களில், வாடிக்கையாளர்கள் எங்கு வேண்டுமானாலும், தங்கள் கார்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம். வாரம் முழுவதும் நடத்தப்படும் இந்த சர்வீஸ் கேம்ப்கள் மூலம் வாடிக்கையாளர்கள், தங்களின் கார்களை மழைகாலத்திற்கு தயார் செய்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகி டெக்னீஷியன்கள் மூலம் 17 நிலைகளிலான செக்கப் நடத்துகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஹைட்ரோ லாக்கிங் மற்றும் தண்ணீர் நிரம்பிய பகுதிகளில் எப்படி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது என்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த சர்வீஸ் கேம்ப்பின் போது, வைப்பர் பிளேட்கள, வைப்பர் மோட்டார், பிரேக் பேட்கள் மற்றும் மட் ஃபிளாப்கள் உள்ளிட்டவற்றின் சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

maruti-suzuki-monsoon-fit-checkup-camp-2016-held-across-india

மாருதி நிறுவனம் நடத்தும் இந்த சர்வீஸ் கேம்ப், இலவசமாக நடத்தபடுகிறது. மழைகாலத்தின் போது, தங்கள் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வாகனம் இயக்கும் அனுபவம் பெற வேண்டும் என்பதே மாருதி நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. வாகனங்களில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஏதாவது இருந்தால், அது குறித்து, மாருதி சுஸுகி டெக்னீஷியன்கள், வாடிக்கையாளர்களுக்கு விளக்குகின்றனர்.

2016 மான்சூன் ஃபிட் செக்கப் கேம்ப்பின் போது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்களிலும் ஸ்பெஷல் ஆஃபர்கள் கிடைக்கும். மேலும், மான்சூன் ஃபிட் செக்கப் கேம்ப்பின் போது, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, ஆக்சஸரீஸ், ஸ்பேர்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் வழங்கப்படுகிறது.

English summary
Maruti Suzuki organises 'Monsoon Fit Checkup Camp' Pan India, in order to make customers cars, ready for monsoons. This week long camp is organised from June 24-30. Customers and owners of Maruti Suzuki can participate at any of Maruti Suzuki's 1,714 dealerships across India. This checkup camp is held like complimentary service. To know more, check here...
Story first published: Monday, June 27, 2016, 10:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark