மாருதி சுஸுகி கார் ஆலைகளில் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலைகளில், உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்கு ஒரு முறை, மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் குர்கான் மற்றும் மானேசர் உற்பத்தி ஆலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இந்த பணிகள் வழக்கமாக ஜூன் மாத இறுதியில் மேற்கொள்ளப்படுகிறது.

maruti-suzuki-production-plants-shut-down-for-a-week-maintenance

ஆனால், இந்த முறை இந்த பராமரிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன்னதாகவே நடத்தப்படுகிறது. இதையடுத்து, ஜூன் 6 முதல் ஜூன் 11-ஆம் தேதிகள் வரை மாருதி சுஸுகி கார் ஆலைகளில், உற்பத்தி நடைபெறாது.

சுப்ரோஸ் ஆட்டோ ஏர் கண்டிஷனிங் சிஸ்டம்ஸ், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு மிக முக்கியமான சப்ளையராக உள்ளது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தினால், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனால், இந்த மாருதி சுஸுகி கார் ஆலைகள் மூடபட்டு, இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், இந்நிறுவனத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த 2 மாருதி சுஸுகி கார் ஆலைகளையும் கூட்டாக சேர்த்து, ஒரு நாளில் சுமார் 5,000 கார்கள் மற்றும் எஸ்யூவிகள் தயாரிக்கபடுகிறது. ஒரு வருடத்தில், சுமார் 15 லட்சம் கார்கள் தயாரிக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில், மாருதி பலேனோவின் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் என்ற அளவிலும், விட்டாரா ப்ரெஸ்ஸாவின் காத்திருப்பு காலம் 9 மாதங்கள் என்ற அளவிலும் உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக தற்போது செய்யப்படுள்ள இந்த தற்காலிகமான உற்பத்தி நிறுத்தத்தால், இந்த மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலைகளில் தயாரிக்கப்படும் பலேனோ மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸாவின் காத்திருப்பு காலங்களில் எத்தகைய மாற்றங்கள் நிகழ உள்ளது என காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki shuts down their Production Plants for one week period. Maruti Suzuki started its biennial maintenance at its Gurgaon and Manesar ahead of schedule. Hence, production plants will remain closed from June 6 to June 11. Normally, Maruti Suzuki schedules its biennial mid year maintenance at end of June. To know more about this, check here...
Story first published: Monday, June 6, 2016, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X