மாருதியின் 77,380 பலேனோ, ஸ்விப்ட் டிசையர் கார்கள் ரீகால் செய்யப்படுகிறது

Written By:

மாருதி நிறுவனம் வழங்கும் ஸ்விப்ட் டிசையர் செடான் மற்றும் பலேனோ ஹேட்ச்பேக் மாடல்களில் 77,380 கார்கள் ரீகால் செய்யப்படுகிறது.

ஏர் பேக்குகள் மற்றும் பழுதான ஃப்யூவல் ஃபில்டர்களை சரி செய்யவே இந்த ரீகால் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

மொத்ததமாக ரீகால் செய்யப்படும் 77,380 கார்களில், 75,419 கார்கள் மாருதி பிரிமியம் ஹேட்ச்பேக்கான பலேனோ மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களை சேர்ந்ததாகும். 1,961 கார்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) பொருத்தபட்ட ஸ்விப்ட் டிசையர் மாடலை சேர்ந்ததாகும்.

75,419 மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார்கள் ஆகஸ்ட் 3, 2015 முதல் மே 17, 2016-க்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கபட்டவை ஆகும். ஏர் பேக்குகளை கட்டுப்படுத்தும் மென்பொருளை (சாஃப்ட்வேர்) மேபடுத்துவதற்காகவே இவை ரீகால் செய்யபடுகிறது.

இதே ஆகஸ்ட் 3, 2015 முதல் மே 17, 2016-க்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கபட்ட மாருதி பலேனோ ஹேட்ச்பேக்கின் டீசல் வேரியன்ட் கார்கள், ஃப்யூவல் ஃபில்டர்களை சரி செய்ய ரீகால் செய்யப்படுகிறது.

maruti-suzuki-recalls-77000-baleno-swift-dzire-cars

ரீகால் செய்யப்படும் 75,419 மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார்களில், 17,231 கார்கள் இந்தியாவிற்கு வெளியே ஏற்றுமதி செய்யபட்டுள்ளது.

1,961 ஏஎம்டி மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்கள், பழுதான ஃப்யூவல் ஃபில்டர்களை சரி செய்ய ரீகால் செய்யப்படுகிறது.

இந்த ரீகால் நடவடிக்கை 31 மே 2016 முதல் மேற்கொள்ளபட உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு, இந்த ரீகால் நடவடிக்கை குறித்த முறைப்படியான அறிவிப்பு, அழைப்பு டீலர்ஷிப்கள் மூலம் மேற்கொள்ளபடும். இந்த ரீகால் நடவடிக்கையின் போது மேற்கொள்ளபடும் அனைத்து மேம்பாடுகள் மற்றும் பழது சரி பார்த்தல் நடவடிக்கைகளும் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக செய்யப்படுகிறது.

English summary
Maruti Suzuki is recalling 77,380 hatchbacks and sedans to fix issues with airbags and faulty fuel filters. Out of these 77,380 cars recalled, 75,419 units are petrol and diesel variants of Maruti's premium hatchback Baleno and remaining 1,961 units are of Swift Dzire compact hatchback fitted with the AMT gearbox (Auto Gear Shift). To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark