புதிய பெட்ரோல் இஞ்ஜினுடன் விரைவில் வெளியாகிறது மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர்

Written By:

மாருதி எஸ் கிராஸ் மாடலுக்கு, மாருதி சுஸுகி நிறுவனம் புதிய பெட்ரோல் இஞ்ஜினை வழங்க திட்டமிட்டுள்ளது.

உலகின் பிற பகுதிகளை போல், இந்தியாவிலும் டீசல் இஞ்ஜின் தொடர்பான சுற்றுசூழல் விதிமுறைகள் கடுமையாகி கொண்டே இருக்கிறது. இதனை சமாளிக்கும் விதமாக, மாருதி நிறுவனம் தங்களின் எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் மாடலுக்கு புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்த உள்ளனர்.

maruti-suzuki-s-cross-crossover-to-get-new-petrol-engine-soon

M15A என்ற குறியீட்டு பெயர் (கோட் நேம்) கொண்ட இந்த இஞ்ஜின், ஏற்கனவே பிற நாடுகளுக்கு வழங்கப்படும் மாடல்களில் வழங்கப்படுகிறது. 4 சிலிண்டர்கள் உடைய இந்த இஞ்ஜின் மாறுபடும் வால்வ் டைமிங் (variable valve timing) கொண்டுள்ளது.

1,490 சிசி கொள்ளளவு கொண்ட இந்த M15A இஞ்ஜின், 5,500 ஆர்பிஎம்களில் 100 ஹெச்பியையும், 4,100 ஆர்பிஎம்களில் 133 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த M15A இஞ்ஜின், 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின்களுடன் கூடுதல் தேர்வாக வழங்கப்படும். தற்போதைய நிலையில், 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்களின் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது. எனவே, இது ஆர்டரின் பேரிலேயே வழங்கபட்டு வருகிறது.

maruti-suzuki-s-cross-crossover-to-get-new-petrol-engine-shortly

மாருதி நிறுவனம், புதிய இஞ்ஜின் கொண்ட எஸ் கிராஸ் மாடலை, தேர்வு முறையிலான 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த M15A இஞ்ஜின், சியாஸ் செடானில் பொருத்தபட்டுள்ள 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினுக்கு மாற்றாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளது.

English summary
Maruti Suzuki is planning to offer new 1.5-litre petrol engine for its S-Cross crossover. Environmental regulations for diesel engines are increasing in India also. As response to this, Maruti is bringing new engine, codenamed as M15A, which is already in use in other countries. M15A engine will be offered alongside 1.3-litre and 1.6-litre diesel engines. To know more, check here...
Story first published: Tuesday, June 21, 2016, 10:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark