மாருதி எஸ் கிராஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்ட் இந்தோனேஷியாவில் அறிமுகம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் மாருதி எஸ் கிராஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்ட் இந்தோனேஷியாவில், ஜிஐஐஏஎஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மாருதி எஸ் கிராஸ் மாடலின் டீசல் வேரியன்ட் தான் இந்தியாவில் கிடைத்து வருகிறது. இதன் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எஸ் கிராஸ் மாடலின் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த மாடலை சுஸுகி நிறுவனம், தங்களின் இந்தோனேஷிய இணையதளத்தின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

மாருதி எஸ் கிராஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்ட், குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஜிஐஐஏஎஸ் ஆட்டோ ஷோ 2016...

ஜிஐஐஏஎஸ் ஆட்டோ ஷோ 2016...

ஜிஐஐஏஎஸ் அல்லது கைகிண்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ 2016 (GAIKINDO Indonesia International Auto Show (GIIAS) 2016) என்ற ஆட்டோ ஷோ இந்தோனேஷியாவில் நடை பெற்று வருகிறது.

இது பிஎஸ்டி சிட்டியில் உள்ள இந்தோனேஷியா கன்வென்ஷன் செண்டர் என்ற பகுதியில், 11 ஆகஸ்ட் முதல் 21 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.

இந்த ஆட்டோ ஷோவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தயாரிப்புகளின் காட்சிப்படுத்தல் மற்றும் அறிமுகம் நடைபெற்று வருகிறது.

இந்தோனேஷியாவிற்கான இஞ்ஜின்;

இந்தோனேஷியாவிற்கான இஞ்ஜின்;

இந்தோனேஷியாவிற்கான மாருதி எஸ் கிராஸ், பொலிவு கூட்டப்படுவதற்கு முந்தைய மாடல் ஆகும். இந்த மாருதி எஸ் கிராஸ், 4 சிலிண்டர்கள் உடைய 1.5 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 107 பிஹெச்பியையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்த மாருதி எஸ் கிராஸ் மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாடல்;

இந்தியாவிற்கான மாருதி எஸ் கிராஸ், அதே எம்15 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும். தற்போதைய நிலையில், மாருதி எஸ் கிராஸ், 1.3 லிட்டர் டிடிஐஎஸ் 200 மற்றும் 1.6 லிட்டர் டிடிஐஎஸ் 320 ஆகிய டீசல் இஞ்ஜின்கள் கொண்டிருக்கலாம்.

மேலும், ஐரோப்பிய சந்தைகளுக்கான மாடல்களில் உபயோகிக்கப்படும் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விலை;

விலை;

இந்தோனேஷிய சந்தைகளுக்கான மாருதி எஸ் கிராஸ் மாடலின் விலை விவரங்கள், இது வரை வெளியாகவில்லை.

சோதனைகள்;

சோதனைகள்;

பொலிவு கூட்டப்பட்ட மாருதி எஸ் கிராஸ் மாடல், ஏற்கனவே ஐரோப்பியாவில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போதும், பிற சந்தர்பங்களிலும் காணப்படுகிறது.

எனினும், எந்த சந்தைகளில் விற்கப்படும் மாருதி எஸ் கிராஸ், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பது குறித்து எந்த விதமான தெளிவுதன்மையும் இல்லை.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

மாருதி எஸ் கிராஸ் மாடல், இந்தியாவில் அவ்வளவாக புகழ் பெறாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், மாருதி பலேனோ, மாருதி எஸ் கிராஸ் மாடலை காட்டிலும் அபரிதமான புகழ் பெற்றுள்ளது.

பலேனோ, மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி எஸ் கிராஸ் மாடலின் பெட்ரோல் வேரியன்ட், இந்திய வாகன் சந்தைகளுக்கு கொண்டு வரபட்டால், மாருதி எஸ் கிராஸ் விற்பனை பெரும் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி எஸ் க்ராஸ் காரை அசத்தலாக மாற்றிய ஹைதராபாத் இளைஞர்!

புதிய பெட்ரோல் இஞ்ஜினுடன் விரைவில் வெளியாகிறது மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர்

எஸ் கிராஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki S-Cross Petrol Model Debuts in Indonesia in Gaikindo Indonesia International Auto Show 2016 (GIIAS 2016). Suzuki has listed their S-Cross petrol model in their Indonesian Website much before its debut in GIIAS 2016. Maruti Suzuki S-Cross is available as diesel models in India. Petrol variant is expected to be launched soon. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X