மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

மாருதி நிறுவனம், தங்களின் மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த மாடல், பண்டிகை காலங்களை ஒட்டி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் பற்றிய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கில் வழக்கமான மாருதி ஸ்விப்ட், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 83 பிஹெச்பியையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும். மேலும், இந்த இஞ்ஜின், ஒரு லிட்டருக்கு 20.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கின் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின், 74 பிஹெச்பியையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கின் 2 இஞ்ஜின்களும், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விப்ட் டெக்கா...

மாருதி ஸ்விப்ட் டெக்கா...

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக், மிட்-லெவல் கிரேட் எனப்படும் நடுநிலை கிரேட்டை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்த ஹேட்ச்பேக்கில் இன்னும் ஏராளமான புதிய மற்றும் உபயோகமான அம்சங்கள் உள்ளது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

மேம்பாடுகள் பொருத்தவரை, இந்த மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கை சுற்றிலும் சைட் ஸ்கர்ட்கள் மற்றும் புதிய ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர் உள்ளது.

மேலும், ஹூட் முதல் பூட் லிட் வரை செல்லும் ட்வின் ரேசிங் ஸ்டிரைப்கள் உள்ளன. கூடுதலாக, சி-பிள்ளர் மற்றும் ரியர் டோர் ஆகிய பகுதிகளில் தீம் அடிப்படையிலான சிங்கிள் ஸ்டிரைப் உள்ளது. இதன் ஃபிரன்ட் டோர்கள் நன்கு காணக்கூடிய வகையில் உள்ள நம்பர் "10" டீகல்கள் உள்ளது.

வீல் டிசைன்;

வீல் டிசைன்;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கின் வீல்களுக்கு கிளாஸ்ஸி பிளாக் நிற ஃபினிஷிங் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் மாடலில், இந்த வீல்களுக்கு சில்வர் வண்ணத்திலான ஃபினிஷிங் இருந்தது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கின் இன்டீரியரில் அதிக அளவிலான மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

இதன் இன்டீரியரில், புளுடூத் மற்றும் எக்ஸ்டெர்னல் மைக் உடைய சோனி மல்டீமிடியா டச்ஸ்கிரீன் உள்ளது. மேலும், 6-இஞ்ச் சோனி டோர் மவுண்டட் ஸ்பீக்கர்கள், காண்டிராஸ்ட் வைட் பைப்பிங் உடைய பிளாக் மற்றும் ரெட் தீம் கொண்ட சீட் கவர்கள், ஸ்டீயரிங் வீல் கவர், ஃபிரன்ட் ஆரம் ரெஸ்ட், கேமரா உடைய ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளது.

கேபின்;

கேபின்;

இதன் கேபின், இன்டீரியர் ஸ்டைலிங் கிட் கொண்டுள்ளது. இந்த இன்டீரியர் ஸ்டைலிங் கிட், டோர் சில் கார்ட், ஆம்பியன்ட் லைட், செண்டர் கன்சோலில் ஃபோ கார்பன் ஃபைபர் ஃபினிஷ், ட்ரெண்டி ஃப்ளோர் மேட்கள் மற்றும் கியர் பூட் கவர் ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

அறிமுகத்திற்கான காரணம்;

அறிமுகத்திற்கான காரணம்;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக், விளையாட்டு துறையின் மிக முக்கியமான சின்னமான எண் "10"-க்கு மரியாதை செலுத்து விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாருதி நிறுவனம் தெரிவிக்கின்றது.

எண் "10" ஆனது, பல வருடங்களாக, சர்வதேச அளவிலான பெரிய கால்பந்து வீரர்கள் ஆண்டாண்டுகாலமாக, தங்களின் ஜெர்ஸியில் அணிந்து வந்துள்ளனர். இந்த டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக், இத்தகைய சாதனையாளர்களின் வெற்றியை மெச்சும் வகையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக், பிரைட் ரெட் மற்றும் பியர்ல் வைட் ஆகிய 2 நிறங்களில் கிடைக்கிறது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கின் அறிமுகம் குறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆர்.எஸ்.கல்சி மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், "ஸ்விப்ட் மாடலானது, ஸ்போர்ட்டியான, ஸ்டைலான மற்றும் டிரைவ் செய்ய இனிமையான காராக உள்ளது. ஸ்விப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, சிறந்த முறையில் விற்பனையாகும் மாடலாக உள்ளது. பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், எங்களது ஆளுமையை தக்கவைத்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும் மாடல் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்திய மக்களின் மாறி வரும் தேர்வுகள் மற்றும் எண்ணங்களுக்கு ஏற்றவாறு, இதன் தோற்றம், தொழில்நுட்பங்கள் மற்றும் அம்சங்கள் தொடர்பான விஷயத்தில் பரிணமித்துள்ளது. இந்த மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக், பிராண்டின் மதிப்பை மேம்படுத்தும் வகையிலும், ஸ்போர்ட்டி தன்மையை கூட்டும் வகையில் கட்டாயம் இருக்கும்" என ஆர்.எஸ்.கல்சி தெரிவித்தார்.

விலை;

விலை;

மாருதி ஸ்விப்ட் டெக்கா லிமிடெட் எடிஷன் ஹேட்ச்பேக்கின் விஎக்ஸ்ஐ ட்ரிம் 5,94,445 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையிலும், விடிஐ ட்ரிம் 6,86,983 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி ஸ்விப்ட் மாடலில், புதிய டிஎல்எக்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

பொலிவு கூட்டப்பட்ட புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக் அக்டோபரில் அறிமுகம்

ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti-Suzuki has launched limited edition version of their Swift in India ahead of festive season. This limited edition car is called Swift Deca or Maruti Suzuki Swift Deca Limited Edition Hatchback. Swift Deca limited edition model is launched as tribute to one of sport's ultimate symbols of glory - the number '10' - used mainly by world's football players. To know more, check here...
Story first published: Tuesday, August 30, 2016, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X