3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம் பெரிய அளவிலான கார்களை விரைவில் தயாரித்து வெளியிட உள்ளனர். இந்தியாவை சேர்ந்த மாருதி நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் இணைந்து மாருதி சுஸுகி என்ற பெயரில் இயங்கி வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரிய அளவிலான கார்களை அறிமுகம் செய்யும் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை, இனி தெரிந்து கொள்ளலாம்.

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

வெவ்வேறு காலக்கட்டங்களில், மக்களின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. கொஞ்ச காலம் மக்களுக்கு சிறிய அளவிலான கார்கள் பிடித்ததாக இருக்கிறது. கொஞ்ச காலம், மக்களுக்கு பெரிய அளவிலான கார்கள் பிடித்தவாறு உள்ளது.

இப்படி மாறி வரும் மக்களின் ரசனைக்கு ஏற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரிய கார்களையும், சிறிய கார்களையும் மாற்றி மாற்றி தயாரித்து வழங்குகின்றனர்.

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

மாருதி நிறுவனம் அறிமுகம் செய்த சியாஸ் செடான் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்கள், அமோகமான வெற்றி பெற்றது. இதில் ஊக்கம் மாருதி நிறுவனம், மேலும் பல எஸ்யூவிகளையும், பெரிய அளவிலான கார்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

மாருதி நிறுவனம், இந்த பெரிய அளவிலான கார்கள் மீதான தங்களின் சந்தை தாக்கத்தை தக்கவைத்து கொள்ள விரும்புகின்றனர்.

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

சியாஸ் செடான் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்கள் பெற்ற அபார வெற்றியை குறித்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் எம்டி-யான கெனிச்சி அயுகவா மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், "மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து மக்கள் கூடுதல் பிரியம் கார்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என கெனிச்சி அயுகவா தெரிவித்தார்.

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

மாருதி சுஸுகி நிறுவனம், ஏற்கனவே இந்திய வாகன சந்தைகளின் 47% கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் சந்தை மதிப்பை மேலும் 10% வரை கூட்ட விருப்பபடுகின்றனர்.

2017-ஆம் ஆண்டு முதல் மாருதி நிறுவனம், தங்களின் உறபத்தியை குஜராத்திலும் துவக்க உள்ளதாக கெனிச்சி அயுகவா அறிவித்தார்.

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான உற்பத்தி ஆலைகள், ஒன்று மானேசர் என்ற இடத்திலும், மற்றொன்று குர்கான் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. இந்த 2 உற்பத்தி ஆலைகளிலும் ஒரு வருடத்திற்கு சுமார் 15 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகிறது.

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலைகளில், உற்பத்தியை கூட்டும் பொருட்டு, 3-வது ஷிஃப்ட்திலும் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது என கெனிச்சி அயுகவா தெரவித்தார்.

3 புதிய மாடல்களுடன் போட்டியாளர்களை புறம்தள்ள மாருதி மெகா திட்டம்

நுழைவு நிலை கார்கள் செக்மென்ட் தான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகப்பெரிய அசைக்கமுடியாத பலமாக உள்ளது. ஆனால், மாருதி சுஸுகி நிறுவனம், தற்போதைய நிலையில், பலத்த போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், "இந்த போட்டிகளை சமாளிக்கும் வகையில், மாருதி ஆல்ட்டோவின் புதிய வடிவம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்" என மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஇஒ கெனிச்சி அயுகவா தெரிவித்தார்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி தொடர்புடைய செய்திகள்

மாருதி சுஸுகி தொடர்புடைய செய்திகள்

ஆல்ட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

குறிப்பு; இங்கு காண்பிக்கப்பட்ட படங்கள் மாதிரி படங்கள் ஆகும்...

Most Read Articles
English summary
Maruti Suzuki achieved immense success with Ciaz sedan and recently launched Brezza SUV. After this, Maruti Suzuki wants to strengthen its hold over bigger cars and SUV segment. Maruti Suzuki plans to launch more SUVs and bigger cars. Maruti Suzuki, MD and CEO, Kenichi Ayukawa, said that, new version of Alto shall be launched soon. To know more, check here...
Story first published: Tuesday, August 30, 2016, 17:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X