விற்பனையில் டாப் 10 கார்கள்... 6 இடங்களை கைப்பற்றிய மாருதி!

Written By:

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் விற்பனையில் முதல் 10 இடங்களில் உள்ள கார்களின் விபரங்களை சியாம் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

அதில், 10ல் 6 இடங்களை மாருதி கார் நிறுவனத்தின் தயாரிப்புகள் கைப்பற்றி அசத்தியிருக்கின்றன. கடும் சந்தைப்போட்டி, புதிய மாடல்களின் வரவுகளை தாண்டியும் மாருதி கார்கள் வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளது.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 1,20,720 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மாதா மாதம் நம்பர் 1 இடத்தில் இருப்பதால், இந்த பட்டியலிலும் முதல் இடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. மிக குறைவான விலையில் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட மாருதி கார் என்பதே இதன் பலம்.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

இரண்டாது இடத்தில் மாருதி வேகன் ஆர் கார் பிடித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 86,939 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட தற்போது விற்பனை 2.69 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிகச் சிறந்த மாடல் என்பதும் குறைவான பட்ஜெட்டில், நிறைவான அம்சங்களை கொண்டிருப்பதும் வரவேற்புக்கான காரணங்கள்.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

மூன்றாவது இடத்திலும் மாருதி கார்தான். ஆம், அனைவருக்கும் விருப்பமான மாருதி டிசையர் கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஏப்ரல்- செப்டம்பர் இடையிலான காலத்தில் 81,926 டிசையர் காம்பேக்ட் செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏராளமான காம்பேக்ட் செடான் கார்கள் மார்க்கெட்டில் இருந்தாலும், குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார் என்பது இதன் பலம். கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 1,03,651 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது விற்பனை 20.95 சதவீதம் குறைந்திருக்கிறது.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

நான்காவது இடத்தில் அனைவருக்கும் விருப்பமான மாருதி ஸ்விஃப்ட் கார் உள்ளது. ஏப்ரல் - செப்டம்பர் இடையிலான காலத்தில் 80,756 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. பங்காளி பலேனோவால் ஸ்விஃப்ட் விற்பனையில் சிறிது சறுக்கல் ஏற்பட்டிருப்பது உண்மை.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

ஐந்தாவது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் பெற்றிருக்கிறது. ஏப்ரல்- செப்டம்பர் காலக்கட்டத்தில் 71,403 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைன், வசதிகள், மைலேஜ், பட்ஜெட் விலை என அனைத்திலும் சிறப்பான சாய்ஸ்.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

ஆறாவது இடத்தை ஆணழகன் ஹூண்டாய் எலைட் ஐ20 பெற்றிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 61,784 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. மாருதி பலேனோ கார் நெருக்கடி கொடுத்தாலும், பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் முதல் இடத்தை பிடித்திருப்பது இதன் மூலமாக அறியப்பெறுகிறது.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

ஏழாவது இடத்தை ரெனோ க்விட் கார் பெற்றுள்ளது. ஏப்ரல்- செப்டம்ர் இடையிலான காலத்தில் 56,028 ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. எஸ்யூவி போன்ற கம்பீரமான தோற்றம், நவீன வசதிகள், குறைவான விலை போன்றவை இந்த காரின் ஹிட்டுக்கு காரணமாகி உள்ளது.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

எட்டாவது இடத்தை மாருதி பலேனோ கார் பெற்றிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 54,947 மாருதி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. தோற்றம், வசதிகளில் மிகவும் பிரிமியமாகவும், விலையில் போட்டியாளர்களைவிட குறைவாக இருப்பதும் இதன் வெற்றிக்கு காரணங்கள்.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

ஒன்பதாவது இடத்தை மாருதி பிரெஸ்ஸா கார் பெற்று அசத்தியிருக்கிறது. ஏப்ரல் - செப்டம்பர் இடையிலான ஆறு மாத காலத்தில் 50,859 பிரெஸ்ஸா எஸ்யூவி கார்களை மாருதி கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மாருதி எஸ்யூவி என்பதே இதற்கு மிகப்பெரிய பலம்.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

பத்தாவது இடத்தை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பெற்றிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதகாலத்தில் 47,923 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. சொகுசு கார் போன்ற தோற்றம், வசதிகள் இந்த காரின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

டாப் 10 லிஸ்ட்டில் 6 இடங்களை கைபற்றிய மாருதி நிறுவனம்!

மொத்தத்தில் இந்த டாப் 10 பட்டியலில் மாருதி ஹூண்டாய் நிறுவனங்களின் தயாரிப்புகளே ஆக்கிரமித்துவிட்டன. தப்பு முதல் போல ரெனோ கார் நிறுவனம் க்விட் புண்ணியத்தில் இந்த பட்டியலுக்கள் நுழைந்து இருக்கிறது.

English summary
Maruti Suzuki India continued its hold on the Indian passenger vehicles segment. The company has six of its models featuring in the top ten selling list in April-September period this fiscal.
Story first published: Monday, October 24, 2016, 16:47 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos