50,000 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனம் சாதனை

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம், 50,000 விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நீண்ட காலமாகவே, இந்தியாவின் முன்னோடி கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்களுக்கு பொதுவாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

50,000 விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் விற்பனை சாதனை தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

விட்டாரா பிரெஸ்ஸா...

விட்டாரா பிரெஸ்ஸா...

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, மாருதி சுஸுகியின் முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவி ஆகும். இது இந்தியாவில் மார்ச் 2016-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டது முதல், இது இந்திய வாகன சந்தைகளில் பெரும் புரட்சி ஏற்படுத்தி வருகிறது.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

அறிமுகம் செய்யப்பட்ட 7 மாதங்களுக்குள், மாருதி நிறுவனம், 50,000 விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் சில வேரியன்ட்களுக்கான காத்திருப்பு காலம் 9 மாதங்கள் வரை நீடிக்கிறது. அப்பப்பட்ட நிலையிலும், வாடிக்கையாளர்கள் இந்த விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியை புக்கிங் செய்ய டீலர்களிடம் குவிந்து வருகின்றனர்.

செப்டம்பரில் சாதனை;

செப்டம்பரில் சாதனை;

மொத்தம் விற்கப்பட்டுள்ள 50,000 விட்டாரா பிரெஸ்ஸா கார்களில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 11,000 முதல் 12,000 கார்கள் விற்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, கேபின் ஸ்பேஸ், சாதனங்கள், பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட அம்சங்களில் சிறந்து விளங்குகிறது. இது போன்ற காரணங்களால் இது இந்தியாவில் மிகப்பெரிய ஹிட் மாடலாக மாறிவிட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவிக்கு, எர்டிகா, சியாஸ் மற்றும் எஸ்-கிராஸ் ஆகிய மாடல்களில் காணப்படும் 1.3 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 90.2 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

செயல்திறன்;

செயல்திறன்;

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 13.3 நொடிகளில் எட்டிவிடும்.

பிரத்யேக அம்சங்கள்;

பிரத்யேக அம்சங்கள்;

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, அதிக இடவசதி கொண்ட கேபின், நவீன இன்ஃபோடேயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட செக்மென்ட்டில் முதல் முறை அம்சங்கள் பல கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகத்திற்கு பிறகு, இது எகோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுக்கு கடுமையான போட்டியாக விளங்கி வருகிறது.

விலையேற்றம்;

விலையேற்றம்;

விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி நல்ல முறையில் விற்பனையாகி வரும் நிலையில், மாருதி நிறுவனம் இந்த சந்தர்பத்தை நன்றாக பயன்படுத்தி கொண்டுள்ளது. இந்நிறுவனம், விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி விலையை, ஆகஸ்ட் மாதம் 20,000 ரூபாய் உயர்த்தியது. இதே நேரத்தில், இதன் காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில், மாருதி சுஸுகி நிறுவனம், விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தியையும் அதிகரித்துள்ளது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை அசால்டாக அபேஸ் செய்த திருடர்கள்... உஷார்...!

ஏலத்திற்கு வருகிறது மைக்கேல் ஷூமேக்கர் பயன்படுத்திய பென்ஸ் கார்!

நூற்றாண்டு கொண்டாடும் போயிங் விமான நிறுவனம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

Most Read Articles
English summary
Maruti Suzuki has sold over 50,000 units Vitara Brezza Compact SUV in Seven Months. Vitara Brezza is Maruti Suzuki's first sub-four metre SUV. It is a great success in Indian market. The compact SUV took the SUV segment in India by storm. Maruti Suzuki has seized opportunity by hiking price of Brezza model by Rs 20,000 in August. To know more, check here...
Story first published: Friday, October 7, 2016, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X