ஏஎம்டி உடைய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா இந்தோனேஷியாவில் காட்சிபடுத்தப்பட்டது

By Ravichandran

மாருதி நிறுவனம், ஏஎம்டி உடைய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி இந்தோனேஷியாவில் காட்சிபடுத்தியது. ஜிஐஐஏஎஸ் அல்லது கைகிண்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ 2016 என்ற ஆட்டோ ஷோ இந்தோனேஷியாவில் நடை பெற்று வருகிறது.

இது பிஎஸ்டி சிட்டியில் உள்ள இந்தோனேஷியா கன்வென்ஷன் செண்டரில், 11 ஆகஸ்ட் முதல் 21 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, இந்திய வாகன சந்தைகளில் மிகவும் புகழ்பெற்ற மாடலில் ஒன்றாக உள்ளது.

ஏஎம்டி உடைய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

விட்டாரா பிரெஸ்ஸா...

விட்டாரா பிரெஸ்ஸா...

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் மார்ச் 8-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஃபிப்ரவரியில் நடைபெற்ற 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இது அமோகமான வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது வரை, சுமார் 70,000-ற்கும் மேற்பட்ட புக்கிங் குவித்து சாதனை படைத்துள்ளது.

இது தற்போது, இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜிஐஐஏஎஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தோனேஷிய வாகன சந்தைகளுக்கான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, 1.3 லிட்டர் டர்போ-டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 90 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்து, திறன் உடையது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்தியாவில் உள்ளதை போல், இந்தோனேஷிவிற்கான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, அதே 5-ஸ்பீட் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

மைலேஜ்;

மைலேஜ்;

ஏஎம்டி கியர்பாக்ஸ் உடைய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் எரிபொருள் திறன் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால், இந்திய வாகன சந்தைகளில் உள்ள 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஒரு லிட்டருக்கு 24.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

போட்டி;

போட்டி;

இந்தோனேஷியாவில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா ரஷ் மற்றும் செவர்லே ட்ராக்ஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

டீசல் இஞ்ஜின்;

டீசல் இஞ்ஜின்;

இந்தோனேஷிய வாகன சந்தைகளில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, டீசல் இஞ்ஜினுடன் மட்டுமே வழங்கப்படும். இது இந்தியாவில் அபாரமான வரவேற்பு பெற்றது போல், இந்தோனேஷியாவிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவை தவிர, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, இந்தோனேஷியாவில் தான் விற்பனை செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விட்டாரா ப்ரெஸ்ஸாவின், 1 லிட்டர் டர்போசார்ஜ்ட் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் தேர்வு விரைவில் அறிமுகம்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் அனுகூலங்கள், குறைபாடுகள் - முழுமையான விவரங்கள்

விட்டாரா பிரெஸ்ஸா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki Vitara Brezza debuted in Indonesia in the ongoing 2016 GIIAS. The Model debuted at GIIAS is variant with an optional AMT gearbox. Indonesia will be the only market outside India, where Brezza will be sold. Gearbox offered in Indonesian-spec Brezza will be same 5-speed AMT. In Indonesia, Suzuki will offer this model only with diesel engine. To know more, check here...
Story first published: Friday, August 12, 2016, 19:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X