மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி, 20,000+ புக்கிங் கடந்து சாதனை

By Ravichandran

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸாவின் புக்கிங், 20,000+ என்ற அளவை தாண்டி வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.

விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவிகளின் டெலிவரி, இந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் துவங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, இந்தியாவில் மார்ச் 8-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது. இது தான் மாருதி நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யபடும் 4-மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள முதல் எஸ்யூவி ஆகும். இது வரை, விட்டாரா ப்ரெஸ்ஸா 70,000 விசாரணைகளை குவித்துள்ளது. இதில், 20,000+ விசாரணைகள் புக்கிங்களாக மாற்றபட்டுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 89 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸா, ஒரு லிட்டருக்கு 24.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

maruti-suzuki-vitara-brezza-suv-deliveries-starts-25th-march

இதன் ரீடெய்ல் விற்பனையை துவக்கிவைத்து பேசிய மாருதி சுஸுகியின் உயர் அதிகாரி ஆர்.எஸ். கல்ஸி, மிகுந்த சந்தோஷத்தை வெளிபடுத்தினார். "வாடிக்கையாளர்கள், விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவிக்கு வழங்கிய ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் ஸ்போர்ட்டியான மட்டும் கட்டுமஸ்தான தோற்றம் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

மக்கள் மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா மாடலை ஓட்டி மகிழும் வகையில் எவ்வளவு சீக்கிரம் இதன் டெலிவரியை செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதன் டெலிவரியை செய்து விட வேண்டும்" என மாருதியின் உயர் அதிகாரி, ஆர்.எஸ். கல்ஸி தெரிவித்தார்.

விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி, இந்தியா முழுவதிலும் உள்ள மாருதி டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யபடும்.

விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியின் விலைகள், 6.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலைகளில் இருந்து துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti launched their new SUV - Vitara Brezza some few weeks ago. From then, it has been receiving very good response from all quarters. It has got over 70,000 inquiries. In that, 20,000+ inquiries have been converted into Bookings. Deliveries of these cars are to commence from 25th March. To know more about Vitara Brezza SUV, check here...
Story first published: Wednesday, March 23, 2016, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X