மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் காத்திருப்பு காலம், 6 மாதங்களாக உயர்வு

Written By:

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் காத்திருப்பு காலம், 6 மாதங்களாக உயர்ந்துள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கடந்த மார்ச் 8-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது. இது வாடிக்கையாளர்களிடம் அமோக ஆதரவை பெற்று வருகிறது.

சில வாரங்களில், இது 40,000+ புக்கிங்களை கடந்துவிட்டது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா இப்படி அபாரமான வரவேற்பை எதனால் பெற்றுள்ளது என்பது குறித்த தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

40,000+ புக்கிங்;

40,000+ புக்கிங்;

மாருதி நிறுவனம் வழங்கும் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கடந்த மார்ச் 8-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது. இது அறிமுகம் செய்யபட்டது முதலே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இதனால், அறிமுகம் செய்யபட்ட சில வாரங்களிலேயே 40,000+ புக்கிங் குவித்து சாதனை படைத்துள்ளது.

காத்திருப்பு காலம் அதிகரிப்பு;

காத்திருப்பு காலம் அதிகரிப்பு;

ஒரு பக்கம், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி அமோக வரவேற்ப்பை பெற்று வருவது நல்ல செய்தியாக உள்ளது. மறு பக்கம், இதன் வரவேற்பு அபாரமாக உள்ளதால், இதன் காத்திருப்பு காலம் சில வாரங்களாக இருந்த நிலை மாறி, தற்போது இதன் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை அதிகரித்துள்ளது.

ரஷ்லேன் நிறுவனம் வெளியிட்ட செய்தி படி, வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்டை பொருத்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

டெலிவரி;

டெலிவரி;

மாருதி நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 5,563 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவிகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தது.

மாருதி டீலர்ஷிப்;

மாருதி டீலர்ஷிப்;

மாருதி நிறுவனம், இந்த விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியை, நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யாமல், வழக்கமான மாருதி ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யும் முடிவினை எடுத்தது.

நெக்ஸா ஷோரூம்கள் கொஞ்ச அவப்பெயரை பெற்ற நிலையில், மாருதி நிறுவனத்தின் இந்த முடிவு இந்நிறுவனத்திற்கு அனுகூலமாக மாறியுள்ளது.

சர்வீஸ்;

சர்வீஸ்;

மாருதி நிறுவனத்திற்கு சொந்தமான மாருதி ஷோரூம்கள் இந்தியா முழுவதும் பரவலாக பரவியுள்ளது.

மேலும், இங்கு நல்ல முறையில் சர்வீஸ் வழங்கபடுவதால், மாருதி நிறுவனத்திற்கு, விட்டாரா பிரெஸ்ஸா விஷயத்தில் இதுவும் கூடுதல் பலமாக மாறியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, ஃபியட் நிறுவனத்திடம் பெறப்பட்டுள்ள 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 89 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

சி பிளார்ஃபார்ம்;

சி பிளார்ஃபார்ம்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, குளோபல் சி பிளாட்ஃபார்ம் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கபட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சப் 4-மீட்டர் எஸ்யூவி;

சப் 4-மீட்டர் எஸ்யூவி;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, சப் 4-மீட்டர் எஸ்யூவி ஆகும்.

இது, இந்த செக்மெண்ட்டில் பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அமைப்புகளின் ஒப்புதல் படி, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, ஒரு லிட்டருக்கு 24.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன்

கொண்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது.

இதன் கிளாஸ் வாகனங்களில், இது தான் சிறந்த மைலேஜ் கொண்டுள்ளது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

தற்போதைய நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பெட்ரோல் இஞ்ஜினுடன் வருவதில்லை.

இதற்காக, மாருதி பலேனோ ஆர்எஸ் மாடலில் உபயோகிக்கபடும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் இதில் உபயோகிக்கபட்டு, பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, புரொஜெக்டர் ஹெட்லைட்கள், டிஆர்எல்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை

கொண்டுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில், டச்ஸ்கீரின் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மஹிந்திரா டியூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸாவின் தாக்கம்;

விட்டாரா பிரெஸ்ஸாவின் தாக்கம்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக, விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகத்தை அடுத்து, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை 1.12 லட்சம் ரூபாய் வரை குறைக்கபட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு நடவடிக்கை, விட்டாரா பிரெஸ்ஸாவோடு இருக்கும் போட்டியை சமாளிக்கும் நோக்கில் செய்யபட்டது.

விலை;

விலை;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அடிப்படை வேரியண்ட், 6.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

விட்டாரா பிரெஸ்ஸாவின் மிக முக்கியமான அம்சமே, இது சரியான விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது தான். இது மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளதால், பல்வேறு போட்டி மாடல்களுக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 4 முதல் 5 மாதங்களாக அதிகரிப்பு

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபட்ட முதல் 2 நாட்களில் 5600+ புக்கிங் குவிப்பு

விட்டாரா பிரெஸ்ஸா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Maruti Suzuki Vitara Brezza compact SUV waiting period has increased to 6 months. Vitara Brezza was launched on March 8th. Within few weeks of its launch it has gathered 40,000+ Bookings. Vitara Brezza is priced correctly at 6.99 Lakh Rupees (Base Variant). To know, as to why Vitara Brezza SUV is gaining such good responses, check here...
Story first published: Tuesday, April 5, 2016, 15:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more