மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் - விபரம்!

Written By:

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி வேகன் ஆர் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு மாருதி வேகன் ஆர் கார் சிறப்பான தேர்வாக இருப்பதுடன், உயரமானவர்களும் வசதியாக அமர்ந்து ஓட்டுவதற்கு சிறந்த பட்ஜெட் காராக இருக்கிறது.

இந்த நிலையில், ஆண்டு கடைசி நெருங்கி வருவதையொட்டி கார் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில் மாருதி வேகன் ஆர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மாருதி வேகன் ஆர் Felicity Edition என்ற பெயரில் இந்த புதிய கார் வந்துள்ளது. இந்த லிமிடேட் எடிசன் மாடல் மாருதி வேகன் ஆர் காரின் எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

மாருதி வேகன் ஆர் காரின் ஃபெலிசிட்டி எடிசன் மாடலின் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டுக்கு ரூ4.40 லட்சம் விலையிலும், விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.5.37 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

வெளிப்புறத்தில் கண்களை கவரும் வகையில் பாடி டீக்கெல்ஸ் எனப்படும் அலங்கார ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ரியர் ஸ்பாய்லரும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. பின்புற கதவில் லிமிடேட் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருக்கிறது.

உயர்தர சீட் கவர்கள், ஸ்டீயரிங் கவர், டபுள் டின் ஆடியோ சிஸ்டம், டிஸ்ப்ள திரையுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், குரல் வழிகாட்டும் வசதி உள்ளிட்ட கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

இது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக மாருதி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி ஆர்எஸ் கல்சி தெரிவித்துள்ளார்.

English summary
Maruti Suzuki has launched the Wagon R Felicity Limited Edition with exciting graphics and features.
Story first published: Saturday, November 26, 2016, 10:57 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos