மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் உற்பத்தி அதிகரிப்பால், காத்திருப்பு காலம் குறையும்

Written By:

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் உற்பத்தி அதிரிக்கப்படுவதால், இதன் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாகன சந்தைகளில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்றாகும். முன்னதாக, இது 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், மக்களுக்கு பிடித்த காராக மாறிவிட்டது.

maruti-to-ramp-up-production-of-vitara-brezza-compact-suv-again

அசாதாரண டிமான்ட் கிடைத்ததால், மாருதி நிறுவனம், ஒரு வருடத்திற்கு 80,000 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தயாரிக்க திட்டமிட்டது. ஆனால், அளவிற்கு மீறி புக்கிங் கிடைத்ததால், இந்த உற்பத்தியை ஒரு வருடத்திற்கு 1,00,000 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களை தயாரிக்க முடிவு செய்தது. ஆனால், அதுவும், பற்றாக்குறையாக உள்ளதால், ஒரு வருடத்திற்கு 1,20,000 கார்கள் என்ற அளவில் உற்பத்தியை கூட்ட முடிவு செய்யபட்டுள்ளது.

டிமான்ட்டினை சமாளிக்கவே இந்த அளவிற்கு உற்பத்தி கூட்டப்பட்டுள்ளது. இது வரை, மாருதி நிறுவனம் ஏப்ரல் - மே மாதங்களில் 20,558 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டெலிவரி செய்துள்ளது. இன்னும், சுமார் 52,000 கார்களின் டெலிவரி பாக்கி உள்ளது. ஏற்கனவே, மாருதி நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் 100 திறனுக்கு செயல்பட்டு வருகிறது. மாருதி நிறுவனம், டிமான்ட்டை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஜூலை மாதம் முதல், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் காத்திருப்பு காலம் குறையும் என வாடிக்கையாளர்கள் நம்பலாம்.

சமீபத்தில் வெளியான தரவுகள் (டேட்டா) படி, வாடிக்கையாளர்கள் மாருதியின் புதிய தயாரிப்புகளான பலேனோ மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை அதிகம் விரும்புவதாக தெரிய வந்துள்ளது. மாருதி நிறுவனம், ஸ்விப்ட் மற்றும் ஆல்ட்டோ கார்களின் உற்பத்தி ஆலைகளை, பலேனோ மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை தயாரிப்பதற்காக பெற்றுள்ளனர்.

மாருதி நிறுவனம், அடுத்ததாக இக்னிஸ் மாடலை அறிமுகம் செய்வதற்காக காத்து கொண்டிருக்கிறது. இந்த காம்பேக்ட் கிராஸ்ஓவர், இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போது, மஹிந்திரா கேயூவி 100 மாடலிடம் இருந்து மாருதி இக்னிஸ் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

English summary
Maruti has ramped up the Production of Maruti Vitara Brezza. Hence, its Waiting Period is expected to reduce from July. Maruti has borrowed production lines of Swift and Alto in favour of Maruti's new products, Baleno and Brezza. Already, Maruti's facilities are already running at 100% capacity. Maruti revised manufacturing strategy to produce 1,20,000 Brezza per year...
Story first published: Friday, July 1, 2016, 7:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark