மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபட்ட முதல் 2 நாட்களில் 5600+ புக்கிங் குவிப்பு

Written By:

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபட்ட முதல் 2 நாட்களிலேயே 5600+ புக்கிங்குகளை பெற்றுள்ளது.

மக்களை வெகுவாக கவர்ந்து வரும் விட்டாரா பிரெஸ்ஸா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

அமோக வரவேற்பு;

அமோக வரவேற்பு;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யபட்டது. முதல் 2 நாட்களில், 5,600 புக்கிங்குகளை குவித்தது.

இந்த தகவலை, மாருதி சுஸுகி இந்தியாவின் உயர் அதிகாரியான ஆர்.எஸ்.கல்சி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

சி பிளார்ஃபார்ம்;

சி பிளார்ஃபார்ம்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, குளோபல் சி பிளாட்ஃபார்ம் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கபட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கபட்டு, உருவாக்கபட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு;

இந்திய தயாரிப்பு;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சுமார் 98% வரை இந்திய பொருட்கள் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

இதனால் தான், இது பிற மாடல்களுக்கு சவால் வழங்கும் விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதன் எல்டிஐ வேரியண்ட், 6.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதன் இசட்டிஐ+ ட்ரிம் 9.68 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகம் செய்யபட்டது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, புரொஜெக்டர் ஹெட்லைட்கள், டிஆர்எல்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், இது டச்ஸ்கீரின் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது.

சப் 4-மீட்டர் எஸ்யூவி;

சப் 4-மீட்டர் எஸ்யூவி;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட் போன்றே சப் 4-மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில் பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, 1.3 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் இஞ்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின், நின்ற நிலையில் இருந்து 100 கிமீ வரையிலான வேகத்தை 13.3 நொடிகளில் எட்டிவிடும்.

மைலேஜ்;

மைலேஜ்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஆராய் அமைப்பின் அங்கீகாரத்தின் படி, ஒரு லிட்டருக்கு 24.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது.

சிறந்த தேர்வு;

சிறந்த தேர்வு;

ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் உள்ளிட்ட மாடல்களை தவிர்த்து, இந்திய தயாரிப்புகளை கொண்டு மேம்படுத்தி கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சிறந்த தேர்வாக இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது- முழு விபரம்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் படங்கள், தொழில்நுட்ப விபரங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Maruti Suzuki Vitara Brezza Bags compact SUV has bagged 5600 Bookings in first 2 Days. Vitara Brezza is constructed in the global C platform. It has been completely designed and engineered in India itself. Vitara Brezza has many advanced features. It has fuel efficiency of 24.3km/l. To know more about Vitara Brezza, check here...
Story first published: Sunday, March 13, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark