மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 4 முதல் 5 மாதங்களாக அதிகரிப்பு

By Ravichandran

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 4 முதல் 5 மாதங்களாக உயர்ந்துள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சமீபத்தில் தான் மார்ச் 8-ஆம் தேதி இந்தியாவில் விற்பனை செய்யபட்டது.

அறிமுகம் செய்யபட்ட உடன் இந்த அளவுக்கு காத்திருப்பு காலம் ஏன் இவ்வளவு உயர்ந்துள்ளது என வரும் ஸ்லைடரில் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

25,000+ புக்கிங்;

25,000+ புக்கிங்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, அறிமுகம் செய்யபட்டது முதல் தற்போது வரை சுமார் 25,000+ புக்கிங் பெற்றுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் புக்கிங் செய்த கார்களை பெற துவங்கிவிட்டனர்.

இருப்பினும், சில மாடல்களின் காத்திருப்பு காலம் நீண்ட காத்திருப்பு காலங்களுடன் தான் கிடைக்கிறது.

சி பிளார்ஃபார்ம்;

சி பிளார்ஃபார்ம்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, குளோபல் சி பிளாட்ஃபார்ம் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கபட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கபட்டுள்ளது.

சப் 4-மீட்டர் எஸ்யூவி;

சப் 4-மீட்டர் எஸ்யூவி;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, சப் 4-மீட்டர் எஸ்யூவி செக்மெண்ட்டில் பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 89 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 200 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஆராய் அமைப்புகளின் கருத்துகளின் படி, விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 24.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது.

பெட்ரோல் இஞ்ஜின்?

பெட்ரோல் இஞ்ஜின்?

துரதிர்ஷ்ட வசமாக, தற்போதைய நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பெட்ரோல் இஞ்ஜினுடன் கிடைப்பதில்லை. பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடன் வழங்குவதற்காக, இந்த விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்காக, 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, புரொஜெக்டர் ஹெட்லைட்கள், டிஆர்எல்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை

கொண்டுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு, டச்ஸ்கீரின் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

இந்திய சந்தைகளில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மஹிந்திரா டியூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் போட்டியை எதிர்நோக்கியுள்ளது.

விலை;

விலை;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 6.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

விட்டாரா பிரெஸ்ஸாவின் மிக முக்கியமான அம்சமே, இது சரியான விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அறிமுகம் செய்யபட்ட முதல் 2 நாட்களில் 5600+ புக்கிங் குவிப்பு

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

விட்டாரா பிரெஸ்ஸா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki Vitara Brezza was launched on March 8th. Since then, it has been getting very good response from customers. It has got over 25,000+ Bookings in few weeks. Though the delivery of Vitara Brezza has commenced, certain models are coming up with 4 to 5 months of waiting period. To know more about this in detail, check here...
Story first published: Thursday, March 31, 2016, 21:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X