மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா படங்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை டீஸ் செய்தது மாருதி

Written By:

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு முன்பாக டீஸ் செய்ய பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவியின் நிழல் படத்தை வெளியிட்டு டீஸ் செய்துள்ளது.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த காம்பெக்ட் எஸ்யூவி இந்திய சாலைகளில் பரிசோதிக்கபடும் போது, ஸ்பை செய்யபட்டுள்ளது.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி, மாருதி சுஸுகியின் வழக்கமான மாருதி சுஸுகி டீலர்ஷிப்கள் மூலம் விற்கபட உள்ளது. இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி நெக்ஸா எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட்களில் கிடைக்க உள்ளது.

இந்த மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த எந்த விதமான தகவல்களையும் இதுவரை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிடவில்லை.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸாவின் எக்ஸ்டீரியர் டிசைன், துடிப்பான மற்றும் நம்பிக்கையான வடிவமைப்பு மொழியை கொண்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த மாடல், ஒரு அர்பன் காம்பெக்ட் எஸ்யூவியாக இருக்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி எங்கு சென்றாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.

maruti-vitara-brezza-teased-ahead-2016-delhi-auto-expo

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி, வீல் ஆர்சஸ், ஹை (உயரிய) கிரௌண்ட் கிளியரன்ஸ் அப்ரைட் ஹூட் மற்றும் குட்டையான ஓவர்ஹேங் கொண்டுள்ளது.

விட்டாரா ப்ரெஸ்ஸாவின் மேற்கூரை ரியர்-எண்ட் (பின் - திசை) நோக்கி சரிந்த வகையில் அமைந்துள்ளது. இது காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தாலும் ஏரோடைனமிக் தோற்றம் கொண்டுள்ளது.

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவி குறித்த இதர தகவல்கள் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட உள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம், இந்த காம்பேக்ட் எஸ்யூவியை விட்டாரா ப்ரெஸ்ஸா, என்று பெயரிடுவதற்கு காரணம், விட்டாரா ப்ரெஸ்ஸா என்ற இத்தாலிய மொழி சொல்லுக்கு, ஆங்கிலத்தில் ஃப்ரெஷ் ப்ரீஸ் (Fresh Breeze) என்றும், தமிழில் புதிய தென்றல் என்று அர்த்தம் உள்ளது.

English summary
Maruti Vitara Brezza was teased ahead of its Debut in the 2016 Delhi Auto Expo. Maruti Suzuki has teased its customers with a silhouette image of their upcoming compact SUV model. The Maruti Vitara Brezza compact SUV will be globally unveiled at the 2016 Auto Expo in Delhi.
Story first published: Sunday, January 10, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark