374,519 கார்களை ரீகால் செய்ய மஸ்தா நிறுவனம் முடிவு

Written By:

தொழில்நுட்ப பிரச்னை கொண்ட டகாட்டா ஏர்பேக்குகள் பொருத்தபட்டுள்ள 374,519 கார்களை மஸ்தா நிறுவனம் ரீகால் செய்ய உள்ளது.

சமீப காலமாக, டகாட்டா நிறுவனத்தால் தயாரிக்கபட்ட கோளாறுகள் நிறைந்த ஏர்பேக்குகளால் ஏராளமான பிரச்னைகள் உருவாகி கொண்டிருந்தன.

இதையடுத்து, அந்நிறுவனத்தால் தயாரிக்கபட்ட ஏர்பேக்குகள் பொருத்திய கார் நிறுவனங்கள், அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ரீகால் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வரிசையில், மஸ்தா நிறுவனமும் பாதிக்கபட்டுள்ளது. மஸ்தா நிறுவனம் தங்கள் நிறுவனம் சார்பாக தயாரிக்கபட்ட 374,519 கார்களில், டகாட்டா நிறுவனத்தால் தயாரிக்கபட்ட பிழையான ஏர்பேக்குகள், ஃப்ரண்ட் பேஸன்ஜர் இருக்கைகளுக்கு பொருத்தபட்டுள்ளதாக அஞ்சுகிறது.

இதனால், இந்த 374,519 கார்களை திரும்ப அழைத்து, பாதிப்புகள் இருந்தால் அந்த குறிப்பிட்ட கார்களின் ஏர்பேக்குகளை மாற்று வழங்க மஸ்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த அனைத்து கார்களும் அமெரிக்காவில் விற்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.

ரீகால் செய்யபட இருக்கும் இந்த கார்களில் பல வகை மாடல்கள் அடங்கியுள்ளது. மே 29, 2002 முதல் மே 5, 2008-க்கு இடையில் தயாரிக்கபட்ட 2003-2008 மஸ்தா6 வாகனங்கள், ஜூலை 1, 2005 முதல் ஜூன் 29, 2007-க்கு இடையில் தயாரிக்கபட்ட 2006-2007 மஸ்தா6ஸ்பீட்6 வாகனங்களும், ஜூன் 25, 2003, முதல் ஜூன் 30, 2003 -க்கு இடையில் தயாரிக்கபட்ட 2004 ஆர்எக்ஸ்-8 ஸ்போர்ட்ஸ் கார்களும் அடங்கும்.

mazda-recalls-over-374500-cars-fitted-faulty-takata-airbags-us

சமீபத்தில், கோளாறுகள் நிறைந்த டகாட்டா ஏர்பேக்குகள் காரணமாக 9 மரணங்களும், 100 மேற்பட்ட காயங்கள் தொடர்பான சம்பவங்கள் நிகழந்துள்ளது.

கோளாறுகள் நிறைந்த டகாட்டா ஏர்பேக்குகள் விரிவடையும் போது, சில நேரங்களில் அவற்றில் இருந்து, பாதிப்புகள் உண்டாக்க கூடிய உலோக துண்டுகள் வெளியாகி 9 மரணங்கள் மற்றும் 100 மேற்பட்ட காயங்களுக்கு காரணமாக விளங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த ரீகால் நடவடிக்கை எப்போது துவங்கபட்டு, எப்போது இந்த பிழையான ஏர்பேக்குகள் மாற்றி தரப்படும் என்பது குறித்து, ஜப்பானிய கார் நிறுவனமான மஸ்தா எந்த விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.

English summary
Mazda has decided to Recall 374,519 Cars which were fitted with faulty Takata Airbags. These faulty Takata Airbags are feared to be fitted in 374,519 cars, which were sold in the United States. But, Mazda has not indicated when the replacements in these 374,519 vehicles would begin.
Story first published: Tuesday, January 12, 2016, 10:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark