டிரைவர் துணையின்றி பயணித்து அசத்திய மெர்சிடிஸ் பென்ஸ் தானியங்கி பஸ்!

Written By:

சாதாரண போக்குவரத்து சூழலில், டிரைவர் துணையில்லாமல் 20 கிமீ தூரம் பயணித்து அசத்தியிருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்திருக்கும் புதிய தானியங்கி பஸ்.

உலகிலேயே சாதாரண போக்குவரத்து சூழலில் இயக்கப்பட்ட முதல் பஸ் இதுதான் என்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது. இந்த பஸ்சின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விசேஷ பஸ்

விசேஷ பஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஃப்யூச்சர் பஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பஸ்சில் விசேஷமான சிட்டிபைலட் என்ற தானியங்கி தொழில்நுட்பம் கொண்டது.

தானியங்கி நுட்பம்

தானியங்கி நுட்பம்

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட டிரக்குகளுக்கான தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பஸ்சுக்கான சிறப்பம்சங்களுடன் இந்த சிட்டிபைலட் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பயணம்

முதல் பயணம்

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரிலுள்ள ஹார்லேம் என்ற இடத்திலிருந்து சிச்சிபோல் விமான நிலையத்துக்கு இடையிலான 20 கிமீ தூரத்திற்கு இந்த பஸ் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

 வெற்றி, வெற்றி...

வெற்றி, வெற்றி...

முதல் பயணத்தை மிகவும் வெற்றிகரமாக முடித்துள்ளது. சாதாரண போக்குவரத்து சூழலில் இந்த பஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆய்வு நோக்கில் இந்த சோதனை ஓட்டம் நடந்தது.

கடும் சவால்கள்

கடும் சவால்கள்

பாதசாரிகள் குறுக்கிடும்போது தானாகவே பிரேக் பிடித்து நின்றதுடன், சிக்னல்களையும் சரியான கண்டுகொண்டு சிறப்பாக இயங்கியிருக்கிறது. சுரங்கப்பாதையிலும் இந்த பஸ் சிறப்பாக இயங்கியதுதான் குறிப்பிடத்தக்க விஷயம் என மெர்சிடிஸ் பென்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.

 நிறுத்தங்களிலும்...

நிறுத்தங்களிலும்...

இந்த பஸ் ஓடும்போது மட்டுமில்லாமல், பேருந்து நிறுத்தங்களையும் சரியாக அடையாளம் கண்டு நின்றதுடன், கதவுகளும் தானாகவே திறந்து மூடின.

 கண்காணிப்பு

கண்காணிப்பு

முன்னெச்சரிக்கையாக இந்த பஸ்சின் இயக்கத்தை ஓட்டுனர் கண்காணித்தபடியே இருந்தார். ஆனால், சோதனை ஓட்டத்தின்போது எந்த இடத்திலும் ஓட்டுனருக்கு வேலை தரவில்லையாம் இந்த சிட்டிபைலட் சிஸ்டம் கொண்ட ஃப்யூச்சர் பஸ்.

சிட்டிபைலட்

சிட்டிபைலட்

இந்த பஸ்சில் ஒரு டஜனுக்கும் அதிகமான கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் சாலையை சரியாக உணர்ந்து கொண்டு இந்த பஸ் பயணித்துள்ளது. இந்த விசேஷ தொழில்நுட்பம் கொண்ட இந்த தானியங்கி பஸ்சை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தி, செயல்பாடுகளை ஆய்வு செய்ய இருக்கிறது பென்ஸ்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

எதிர்காலத்தில் போக்குவரத்து மிகுந்த நகரங்களில் இந்த பஸ் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Mercedes-Benz autonomous bus uses CityPilot technology.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark