மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி சொகுசு செடான், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தங்களின் சி 250 டி சொகுசு செடானை இந்தியாவில் அறிமுகம் செய்தனர்.

மெர்சிடிஸ் சி 250 டி சொகுசு செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மெர்சிடிஸ் சி 250 டி...

மெர்சிடிஸ் சி 250 டி...

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், இந்திய சொகுசு வாகன சந்தைகளில் அதிகம் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்த சொகுசு காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், 2.1 லிட்டர், டர்போ சார்ஜ்ட், டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 201 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், 9-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான், பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், ஒரு லிட்டருக்கு 19.71 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெரும் 6.6 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், அதிகப்படியாக மணிக்கு 247 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தை எட்டும் திறன் உடையதாக உள்ளது.

ஸ்டைல்;

ஸ்டைல்;

ஸ்டைல் படி, மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், புதிய எல்இடி இண்டெல்லிஜண்ட் லைட் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த லைட் சிஸ்டம் லைட்டிங் மற்றும் டிரைவிங் (வாகனம் இயக்கும்) சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிமாற்றம் செய்து கொள்கிறது.

மேலும், வெளிப்புறத்தில் 17-இஞ்ச் அளவிலான 5-ட்வின் ஸ்போக்குகள் உடைய அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது. இந்த அல்லாய் வீல்கள் வெனாடியம் சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யபட்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடானின் உட்புறத்தில் 7-இஞ்ச் அளவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது. இதிலேயே, கார்மின்

மேப் பைலட் நேவிகேஷன் சிஸ்டமும் இயங்குகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், ஆம்பியண்ட் லைட்டிங் வசதியை, ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், சோலார் (ஆம்பர்), போலார் (ஐஸ் புளூ) மற்றும் நியூட்ரல் (வைட்) ஆகிய 3 நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி;

இந்தியாவில் உற்பத்தி;

சி-கிளாஸ் கார்களின் தேவை தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்த புதிய சி 250 டி செடானை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய துவங்கிவிட்டனர். இதனால், காத்திருப்பு காலம் வெகுவாக குறைகிறது.

போட்டி;

போட்டி;

மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான் காருக்கு, பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் மற்றும் ஆடி ஏ4 ஆகிய மாடல்கள் மட்டுமே முக்கிய போட்டியாக விளங்குகிறது.

விலை;

விலை;

சி-கிளாஸ் ரேஞ்சில் வழங்கப்படும் இந்த மெர்சிடிஸ் பென்ஸ் சி 250 டி செடான், 44.36 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

English summary
German luxury carmaker Mercedes-Benz has launched their C 250 d Luxury Sedan in India. Mercedes C 250 d has lots of advanced features. It is produced locally in India. Mercedes C 250 d gives a mileage of 19.71km/l. It has a top speed of 247km/h. Mercedes C 250 d from C-Class range is priced at Rs. 44.36 lakhs ex-showroom. To know more,check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark