மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ-கிளாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

புனேயில் நடந்த இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்பெஷலான சொகுசு காரின் பிரத்யேகமான புகைப்படங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இ-கிளாஸ் மாடலின் எடிஷன் இ பற்றி...

இ-கிளாஸ் மாடலின் எடிஷன் இ பற்றி...

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கபடும் எடிஷன் இ, இந்தியாவில் இ கிளாஸ் மெர்சிடிஸ் அறிமுகம் செய்யபட்டு 20 ஆண்டுகள் நிறைவு அடைவதை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யபடுகிறது.

5-ஆம் தலைமுறை;

5-ஆம் தலைமுறை;

இந்த எடிஷன் இ, சமீபத்தில் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்ட இ-கிளாஸ் மாடல் அல்ல என தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முந்தைய தலைமுறை மாடலின் அடிப்படையிலான ஸ்பெஷல் எடிசன் மாடலாக, இந்த எடிஷன் இ மாடல் வந்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த வாகனம், இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்யபடும் 5-வது தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் மாடல் ஆகும்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ, மொத்தம் 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளின் கிடைக்கிறது.

இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் விவரங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ மாடலின் 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 184 பிஹெச்பியையும், 300 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் 2.1 லிட்டர் டீசல் இஞ்ஜின், 204 பிஹெச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ மாடலின் 3.0 லிட்டர் வி6 இஞ்ஜின், 265 பிஹெச்பியையும், 620 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ மாடலின் 3 இஞ்ஜின்களுமே, 7-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ, ஏஎம்ஜி தழுவல் கொண்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் கொண்டுள்ளது.

மேலும், ஃப்ரண்ட் பகுதியில் இல்லுமினேட்டட் 3 பாயிண்டட் ஸ்டார் லோகோ, மெர்சிடிஸ் பென்ஸ் என்ற எழுத்துகள் ஆங்கிலத்தில் பொரிக்கபட்ட பிரேக் கேளிப்பர்கள், எடிஷன் இ பேட்ஜ், 18 இஞ்ச் அல்லாய் வீல்கள் மற்றும் பெரிய டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ மாடலின் இண்டீரியர், லெதர் அப்ஹால்ஸ்ட்ரி, மெமரி ஃபங்க்‌ஷன் உடைய 6 வழி எலக்ட்ரிகள்ளி அட்ஜெஸ்ட் செய்யகூடிய டிரைவர் மற்றும் பயணியர் சீட்கள் உள்ளது.

மேலும், கூல்ட் கிளவ் பாக்ஸ், எலக்ட்ரிக் ரியர் விண்டோ பிலைண்ட்ஸ், எஸ்டி சார்ட் நேவிகேஷன் மற்றும் ஸ்போர்ட்டியான பிரேக் பெடல்கள் ஆகிய அம்சங்களும் சேர்க்கபட்டுள்ளது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ, 8 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் என அழைக்கபடும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஈபிடி எனப்படும் எலக்டிரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன், பிரேக் அசிஸ்ட் உள்ளது.

இதோடு மட்டுமல்லாமல், இந்த எடிஷன் இ, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ஈஎஸ்பி), டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (டிசிஎஸ்), வழிகாட்டும் வசதி கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, கீலெஸ் எண்ட்ரி எனப்படும் சாவி இல்லாமல் நுழையும் வசதி மற்றும் பிரண்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகள் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ மாடலின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ 200 - 48.60 லட்சம் ரூபாய்

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ 250 சிடிஐ - 50.76 லட்சம் ரூபாய்

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் எடிஷன் இ 350 சிடிஐ - 60.61 லட்சம் ரூபாய்

குறிப்பு ; இந்த அனைத்து விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (பூனே) விலை விவரங்கள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

55 பென்ஸ் இ க்ளாஸ் கார்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்க் ஆர்டர்!

கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார் அறிமுகம்!

பென்ஸ் இ க்ளாஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Mercedes-Benz has launched their E-Class Edition E in India, in an event held in Pune. This Edition E by Mercedes-Benz is launched to celebrate the completion of 20 years of the E-Class in India. The Edition E has received some cosmetic changes and few updates compared to the E-Class, which was sold in India earlier.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark