மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும் மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி சொகுசு கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி...

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி...

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும் சமீபத்திய தயாரிப்பு ஆகும்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, இந்த நிறுவனம் சார்பாக 2016-ல், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 5-வது கார் ஆகும்.

விற்கப்படும் விதம்;

விற்கப்படும் விதம்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி, இந்திய வாகன சந்தைகளில் ஆரம்ப கட்டத்தில், சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதுமாக கட்டி முடிக்கபட்ட ரூபத்திலேயே விற்கப்படும்.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, ஜிஎல்சி 300 4மேட்டிக் மற்றும் ஜிஎல்சி 220டி 4மேட்டிக் என அழைக்கப்படும் இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

ஒரு வேரியன்ட் பெட்ரோல் இஞ்ஜின் உடனும், மற்றொரு வேரியன்ட் டீசல் இஞ்ஜினுடனும் வெளியாகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட், 4-சிலிண்டர்கள் உடைய 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட்டின் இஞ்ஜின், 241 பிஹெச்பியையும், 370 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட், 4-சிலிண்டர்கள் உடைய 2.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட்டின் இஞ்ஜின், 168 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட் மற்றும் ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட் ஆகிய 2 வேரியன்ட்களின் இஞ்ஜின்களும், 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

செயல்திறன்;

செயல்திறன்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 6.5 விநாடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.3 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட், உச்சபட்சமாக மணிக்கு 222 கிலோமீட்டர் எட்டும் திறன் உடையதாகும்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட், உச்சபட்சமாக மணிக்கு 210 கிலோமீட்டர் எட்டும் திறன் கொண்டுள்ளது.

டேங்க் கொள்ளளவு;

டேங்க் கொள்ளளவு;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட், ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட் ஆகிய இரண்டு வேரியன்ட்களின் டேங்க் கொள்ளளவுகளும் 50 லிட்டர் என்ற அளவில் உள்ளது.

பூட் ஸ்பேஸ்;

பூட் ஸ்பேஸ்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட், ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட் ஆகியவையின் பூட் ஸ்பேஸ் 550 லிட்டர் என்ற அளவில் உள்ளது.

ஆனால், இவற்றின் பூட் ஸ்பேஸ், 1600 லிட்டர் என்ற அளவு வரை உயர்த்தி கொள்ளலாம்.

எடை;

எடை;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் ஜிஎல்சி 300 4மேட்டிக் வேரியன்ட்டின் எடை 1871 கிலோகிராம் என்ற அளவிலும், ஜிஎல்சி 220டி 4மேட்டிக் வேரியன்ட்டின் எடை 1954 கிலோகிராம் என்ற அளவிலும் உள்ளது.

டிசைன் - முன் பக்கம்;

டிசைன் - முன் பக்கம்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, நீண்ட வீல் பேஸ் மற்றும் குறுகிய ஓவர்ஹேங்க்குகள் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் குடும்ப கார்களின் முகம், இந்த மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக விளங்குகிறது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, ட்யூவல் ஸ்லாட் கிரில், எக்கசக்கமான குரோம் பூச்சு கொண்டுள்ளது. இதன் 3-பாயிண்ட்கள் கொண்ட ஸ்டார் மைய பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் கிரில்லின் இரு பக்கங்களிலும் ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் உள்ளது.

சைட் டிசைன்;

சைட் டிசைன்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் பக்கவாட்டில் அலுமினியம் ஃபினிஷ் உடைய ரன்னிங் போர்ட்கள் உள்ளன. இதன் ரூஃப் ரயில்கள் குரோம் பூச்சு கொண்டுள்ளது. இதன் இறக்கைகள் (விங்க்ஸ்) பகுதிகளில், எடிஷன் 1 ('Edition 1') பேட்ஜ்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் கிரில்லின் அடிப்பகுதியில், குரோம் பூச்சு உடைய அண்டர்ரைட் கார்ட் மற்றும் பெரிய ஏர் இன்டேக் உள்ளது.

ரியர் டிசைன்;

ரியர் டிசைன்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி பின் பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் கொண்டுள்ளது.

இதன் ரியர் பம்பரின், இரு பக்கங்களிலும், 2 எக்ஹாஸ்ட் டிப்கள் நீண்டுகொண்டு இருக்கிறது.

வீல்கள்;

வீல்கள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, 5-ஸ்போக் உடைய 18 இஞ்ச் அளவிலான அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

உட்புற அமைப்பு;

உட்புற அமைப்பு;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் இன்டீரியரில் லெதர் சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் பானராமிக் சன் ரூஃப் உள்ளது.

இதன் செண்டர் கன்சோல், எடிஷன் 1 ('Edition 1') பேட்ஜ் கொண்டுள்ளது. இது 3-ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, இன்டீரியரில் உள்ள செண்டர் கன்சோல் பகுதியில் தான் 7-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது.

இது தான், நேவிகேஷனுக்கு தேவைப்படும் கார்மின் எம்ஏபி பைலட் ஆப் (கார்மின் மேப் பைலட் - Garmin MAP Pilot) கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, யூரோ என்கேப் மூலம் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு தொடர்பான ஏராளமான அம்சங்கள் உள்ளது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியில், 7 ஏர் பேக்குகள், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உடைய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், இஎஸ்பி, ஹில் டிஸ்சென்ட் கண்ட்ரோல் மற்றும் ஏடபுள்யூடி எனப்படும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, ஆடி க்யூ5, மற்றும் பிஎம்டபுள்யூ வழங்கும் எக்ஸ்5 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியன்ட் - ஜிஎல்சி 300 4மேட்டிக்

விலை - 50.90 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

வேரியன்ட் - ஜிஎல்சி 220டி 4மேட்டிக்

விலை - 50.70 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் ஜுன் 2-ல் அறிமுகம்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம்

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
German luxury carmaker Mercedes-Benz have launched their Mercedes GLC SUV in India. Mercedes GLC SUV is the fifth vehicle launched in India in the year 2016 by Mercedes-Benz. Mercedes GLC will initally be offered only as Completely Built Unit (CBU) model. The Prices for GLC SUV start at Rs. 50.7 lakhs ex-showroom, Delhi. To know more, check here...
Story first published: Thursday, June 2, 2016, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X