மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் 3-வது ஆராய்ச்சி மையம், பெங்களூருவில் துவக்கம்

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் தங்களின் மூன்றாவது ஆர் அண்ட் டி மையத்தை பெங்களூருவில் ஸ்தாபித்துள்ளனர்.

ஆராய்ச்சி மற்றும் வளார்ச்சி பணிகளுக்கான இந்த மையம், கோபாலன் ஆக்சிஸ், வைட்ஃபீல்ட், பெங்களூருவில் திறக்கபட்டுள்ளது. ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், இந்திய சந்தைகளில் தங்களின் ஈடுபாட்டை மேலும் வலுபடுத்துகின்றனர்.

ஆர் அண்ட் டி மையத்தின் துவக்க விழாவின் போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான தாமஸ் மெர்கர் மற்றும் மனு சாலே ஆகியோர் பங்கேற்றனர்.

mercedes-benz-india-third-r-and-d-facility-opened-in-bangalore

பெங்களூருவில் அமைக்கபட்டுள்ள இந்த ஆர் அண்ட் டி மைய 1,19,227 சதுர அடி பரப்பளவில் பரவி உள்ளது. இங்கு சுமார் 900 பணியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் வளார்ச்சி பணிகளில் ஈடுபட உள்ளனர். முன்னதாக, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், 2015-ல் பூனேவின் ஹின்ஜேவாடி என்ற இடத்தில் ஒரு ஆர் அண்ட் டி மையத்தை துவக்கினர்.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் தங்களின் முதல் ஆராய்ச்சி மையத்தை 1996-ஆம் ஆண்டிலேயே துவக்கினர். பெங்களூருவிலேயே அமைக்கபட்ட இந்த ஆர் அண்ட் டி மையம் தான் தலைமை அலுவலகமாகவும் செய்லபடுகிறது.

mercedes-benz-india-third-r-and-d-facility-opened-at-bangalore

சுமார் 6,000 இஞ்ஜினியர்கள், மெர்சிடிஸ் பென்ஸ் தேவைபடும் ஆராய்ச்சி மற்றும் வளார்ச்சி பணிகளில் பங்காற்றி வருகின்றனர். மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், பவர்ட்ரெயின், சேஸி, டெலிமேட்டிக்ஸ், எம்பெட்டட் சிஸ்டம் மற்றும் ஐடி ஆகியவை தொடர்பான ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mercedes-Benz inaugurated their third research and development facility in India in Bangalore. This new facility is set up in Whitefield, Bangalore at Gopalan Global Axis. Bangalore research and development facility is spread across 1,19,227 sq. ft. and will have approximately 900 employees. To know about this new Mercedes-Benz's third R&D facility, check here...
Story first published: Wednesday, April 27, 2016, 21:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X