மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ-450 ஏஎம்ஜி கார் விற்பனைக்கு வந்தது!

By Saravana

இந்தியாவில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ-450 ஏஎம்ஜி கூபே கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் சற்றுமுன் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அசத்தலான தோற்றம், செயல்திறன், வசதிகள் என அனைத்திலும் ஓர் சிறப்பான சொகுசு கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கார் குறித்து மும்பையிலிருந்து எமது நிருபர் அஜிங்கியா வழங்கியிருக்கும் படங்கள், தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின் அடிப்படையில், கூபே ரகத்தில் மாற்றியமைக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஏஎம்ஜி பிராண்டு ஆக்சஸெரீகளும் மிரட்டலான தோற்றத்தை வழங்குகிறது. இது பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காருக்கு நேரடி போட்டியாக அமையும்.

எஞ்சின்

எஞ்சின்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே காரில் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த காரில் முன்புற சக்கரங்களுக்கு 40 சதவீத எஞ்சின் பவரையும், பின்புற சக்கங்களுக்கு 60 சதவீத எஞ்சின் ஆற்றலையும் பிரித்தனுப்பும் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் துவங்க நிலையிலிருந்து 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொட வல்லது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் 21 இன்ச் அலாய் வீல்கள், லெதர் இன்டீரியர், 360 டிகிரி கேமரா சிஸ்டம், பனோரமிக் சன் ரூஃப், 5 வித நிலைகளில் எஞ்சினை மாற்றி ஓட்டும் வசதி, எல்இடி விளக்குகள் என சிறப்பம்சங்கள் பட்டியல் நீள்கிறது. டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், அடாப்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பமும் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.

விலை

விலை

ரூ.86.4 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். மொத்தம் 5 வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

அதிரடி தொடர்கிறது

அதிரடி தொடர்கிறது

கடந்த 15 புதிய கார் மாடல்களுடன் விற்பனையில் அசுர வளர்ச்சியை பெற்றிருக்கும் அதே உற்சாகத்துடன், இந்த ஆண்டு 12 புதிய கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில், முதலாவது மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ450 ஏஎம்ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
After launching 15 models in 2015, Mercedes-Benz is still going strong in terms of bringing new models in India. The latest Mercedes to launch in India is the GLE 450 AMG Coupe, priced at Rs. 86.4 lakh ex-showroom (Mumbai).
Story first published: Tuesday, January 12, 2016, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X