கண் கூச்சம் தராத டிஜிட்டல் ஹெட்லைட்: மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம்!

Written By:

ஜெர்மனியை சேர்ந்த ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் சொகுசு கார் மார்க்கெட்டின் மும்மூர்த்திகளாக புகழப்படுகின்றன. மேலும், நவீன தொழில்நுட்ப அம்சங்களை புகுத்துவதில் மூன்று நிறுவனங்களுக்கும் இடையில் போட்டா போட்டி நிலவுகிறது.

அந்த வகையில், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் லேசர் ஹெட்லைட் சிஸ்டத்தை கார்களில் அறிமுகப்படுத்தின. எதிரில் வாகன வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தாத நவீன லேசர் ஹெட்லைட்டுகள். இதுபோன்ற ஒரு நவீன ஹெட்லைட் சிஸ்டம் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் இல்லாதது குறையாக இருந்தது.

டிஜிட்டல் ஹெட்லைட்

டிஜிட்டல் ஹெட்லைட்

இந்த நிலையில், ஆடி, பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் லேசர் ஹெட்லைட்டுகளை போல அல்லாமல் வேறு விதமான தொழில்நுட்பம் கொண்ட ஹெட்லைட்டை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் ஹெட்லைட் என்று இதனை மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகிறது.

வசதி

வசதி

எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தாத வகையில், ஒளிக்கற்றையின் திசை, பிரகாசத்தை தானியங்கி முறையில் கூட்டிக் குறைக்கும் தொழில்நுட்பமாக உள்ளது. லேசர் ஹெட்லைட்டை போன்றே இதன் செயல்பாடு இருந்தாலும், இதில் இருக்கும் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பம் வேறுபடுகிறது.

 அதிக பிரகாசம்

அதிக பிரகாசம்

மேலும், சாதாரண ஹெட்லைட்டுகளைவிட மிக அதிக பிரகாசத்தை தர வல்லதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஹெட்லைட்டிலும் தலா நான்கு கொத்துகளாக மைக்ரோ எல்இடி விளக்குகள் உள்ளன. இரண்டிலுமாக சேர்த்து மொத்தம் 8,192 மைக்ரோ எல்இடி விளக்குகள் உள்ளன.

 செயல்படும் விதம்

செயல்படும் விதம்

இந்த எல்இடி மைக்ரோ விளக்குகளிலிருந்து கிடைக்கும் ஒளியானது ஒவ்வொரு ஹெட்லைட்டிலும் இருக்கும் 10 லட்சம் மின்னணு மைக்ரோ கண்ணாடிகள் மூலமாக குவிக்கப்பட்டு சாலையில் ஒளி வெள்ளம் பாய்ச்சப்படுகிறது. ஒவ்வொரு மைக்ரோ கண்ணாடியும் நகரும் நுட்பம் கொண்டது.

சிறந்த நுட்பம்

சிறந்த நுட்பம்

லேசர் ஹெட்லைட்டுகளைவிட இவை மிக சிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், இவை சாலையில் உள்ள பாதசாரிகள் கடப்பதற்கான ஸீப்ரா கிராஸிங் உள்பட பல சாலை எச்சரிக்கை குறியீடுகளை உணர்ந்து கொண்டு, அதனை நோக்கி கூடுதல் ஒளியை பாய்ச்சும். இதன்மூலமாக, ஓட்டுனர் எச்சரிக்கையுடன் செயல்பட முடியும்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

சாலையை கடக்கும் பாதசாரிகள் மற்றும் விலங்குகளை கூட இரவு நேரங்களில் மிக தெளிவாக பார்க்கும் வகையில் இதன் ஒளிக்கற்றைகள் மிக பிரகாசமாக பாய்ச்சப்படும். அத்துடன், இந்த ஹெட்லைட்டானது சென்சார்கள் மற்றும் கேமரா உதவியுடன் செயல்படுகிறது.

 விரைவில்...

விரைவில்...

இந்த நவீன ஹெட்லைட்டுகள் எப்போது கார்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற விபரம் இல்லை. ஆனால், கூடிய விரைவில் இந்த ஹெட்லைட் கார்களில் அறிமுகம் செய்யப்படும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

English summary
German automaker Mercedes-Benz has introduced an advanced new headlight technology, which is set to feature on its upcoming models.
Story first published: Monday, December 5, 2016, 12:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark