புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் ஆல்-டெர்ரெயின் படங்கள் வெளியீடு

By Ravichandran

மெர்சிடிஸ் நிறுவனம், தங்களின் புதிய இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் ஆல்-டெர்ரெயின் மாடலின் படங்களை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம், உலகின் முன்னோடி கார் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் தற்போது புதிய இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் மாடலின் படங்களை வெளியிட்டது. இது அனைத்து விதமான நிலப்பரப்புகளுக்கும் ஏற்ற வாகனமாக இருக்கும்.

மெர்சிடிஸ் புதிய இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

மெர்சிடிஸ் இ-கிளாஸ் மாடலின் ஆஃப்-ரோட் வடிவமான புதிய இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், ஐரோப்பாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது முறைப்படி 2016 பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக, தற்போது இதன் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ வி90 கிராஸ் கண்ட்ரி மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

உயரம்;

உயரம்;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், வழக்கமான இ-கிளாஸ் எஸ்டேட் மாடலை காட்டிலும் 29 மில்லிமீட்டர் அதிக உயரம் கொண்டுள்ளது. பெரிய 19 அல்லது 20 இஞ்ச் அளவிலான வீல்களாலும், பெரிய சைட் வால்கள் இந்த எஸ்டேட் மாடலை 14 மில்லிமீட்டர் உயர்த்துவதாலும், ஏர்-சஸ்பென்ஷன் உயர்த்துவதன் மூலம் 15 மில்லிமீட்டர் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாலும், இந்த புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் கூடுதல் உயரம் கொண்டுள்ளதாக காணப்படுகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், வழக்கமான இ-கிளாஸ் மாடலில் உள்ள கிரில்லுக்கு பதிலாக, மெர்சிடிஸ் எஸ்யூவி மாடலில் உள்ளது போன்ற கிரில் அமைப்பு கொண்டுள்ளது. 2 டோன்கள் உடைய ஃபிரண்ட் பம்பருடன் இருக்கும் கிரில், இந்த மாடலின் ஆஃப்-ரோட் தன்மைகளை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிற மாற்றங்கள்;

பிற மாற்றங்கள்;

வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்களில் உள்ள கிளாட்டிங், டோர்களுக்கு அடியில் கூடுதல் தடிமனாக்கப்பட்ட சில்கள் முக்கியமான மாற்றங்களாக உள்ளன. மேலும், முன் பக்கத்தில் உள்ளது போல், பின் பக்கத்தில் உள்ள பம்பரும் டியூவல் டோன்கள் கொண்டுள்ளது. மேலும், இது இன்டக்ரேட்டட் எக்ஸ்ஹாஸ்ட்கள் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், வழக்கமாக உள்ள லெதர் சீட்களுடன் வழக்கமான மெர்சிடிஸ் இ-கிளாஸ் மாடலை போலவே உள்ளது. மேலும், இந்த புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் மாடலை, பிற மாடல்களில் இருந்து வேறுபடுத்தி காட்ட, மெர்சிடிஸ் நிறுவனம் இதற்கு எக்ஸ்க்ளூசிவ் அலுமினியம்-கார்பன் ஃபைபர் லுக் ட்ரிம் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பெடல்கள் உள்ளிட்டவற்றை சேர்த்துள்ளது.

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் ஆல்-டெர்ரெயின் படங்கள் வெளியீடு

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், கரடுமுறடான பரப்புகளில் சுலபமாக இயக்கும் வகையில் இதில் டைனமிக் செலக்ட் சிஸ்டம் ஸ்டாண்டர்ட் அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டைனமிக் செலக்ட் சிஸ்டம், ஆல்-டெர்ரெயின் மோட் எனப்படும் புதிய டிரைவிங் மோட் கொண்டுள்ளது. இது, இந்த ஆல்-டெர்ரெயின் மாடலுக்கே உரிய பிரத்யேகமான அம்சமாகும்.

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் ஆல்-டெர்ரெயின் படங்கள் வெளியீடு

ஆல்-டெர்ரெயின் மோட் உபயோகிக்கும் போது, 141மில்லிமீட்டர் என்ற அளவிலான இன்டர்மீடியட் செட்டிங் உடைய கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் இதன் சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் செய்கிறது. மேலும், இது இஎஸ்பி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி, ஏஒய்சி எனப்படும் ஆக்சிலரேஷன் யாவ் கண்ட்ரோல் மற்றும் ஏஎஸ்சி எனப்படும் ஆக்சிலரேஷன் ஸ்கிட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை மாற்றி அமைத்து புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட் மாடலின் ஆஃப்-ரோட் திறன்களை அதிகரிக்கிறது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், இ 220 டி 4மேட்டிக் (E 220 d 4MATIC) எனப்படும் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், 4-சிலின்டர்கள் உடைய டர்போசார்ஜ்ட் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 191 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட்டின் இஞ்ஜின் 9-ஸ்பீட் கியர்பாக்ஸ் மூலமாக 4 வீல்களுக்கும் பவர் கடத்துகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.0 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் ஆஃப்-ரோட் எஸ்டேட், அதிகப்படியாக மணிக்கு 232 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மேட் இன் இந்தியா மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் செப்டம்பர் 29-ல் அறிமுகம்

மெர்சிடிஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யபட்டது

Most Read Articles
English summary
German carmaker Mercedes-Benz has taken covers off all-new Mercedes E-Class All Terrain estate ahead of its debut at 2016 Paris Motor Show. Off-road version of Mercedes' E-Class estate will go on sale in Europe in 2017. New E-Class All Terrain is available in only one variant - E 220 d 4MATIC. All Terrain has top speed of 232km/h. To know more, check here...
Story first published: Thursday, September 22, 2016, 19:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X