9 புதிய மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்திகிறது மெர்சடைஸ்

By Meena

ஜெர்மன் நாட்டின் பெரிய கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், ஆட்டோ மொபைல் ஆர்வலர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கக் காத்திருக்கிறது. அதாவது 9 புதிய மாடல் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது அந்த நிறுவனம்.

இதுதொடர்பான மெர்சடைஸ் நிறுவனத்தின் ஆவணம் அண்மையில் வெளியானது. அதில்தான் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த 9 மாடல்களில் ஒரு பிக் - அப் டிரக் வண்டியும் அடங்கும். மொத்தத்தில் தெறி காட்டிப் பாய்ந்து வர காத்திருக்கிருக்கும் வேங்கையைப் போல ஆட்டொ மொபைல் உலகில் சீறி வரவுள்ளது மெர்சடைஸ்.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்

அந்த மாடல்கள் அனைத்துமே அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இ - கிளாஸ் ரகத்தில் மூன்று புதிய மாடல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இ - கிளாஸ் கூப், இ - கிளாஸ் கேப்ரியோலெட், இ - கிளாஸ் ஆல் டெரைய்ன் (அனைத்து வகையான நிலப்பரப்பிலும் பயணிக்க வல்லது) ஆகிய மூன்று மாடல்களில் அந்த கார்கள் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதைத் தவிர மெர்சிடைஸ் நிறுவனத்தின் பிரபலமான ஸ்போர்ட் காரான ஏஎம்ஜி - ஜிடியின் மேம்படுத்தப்பட்ட மாடலுக்காக பெரும்பாலான கார் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏஎம்ஜி - ஜிடி சி என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பென்ஸ் கார்கள்

கிளப் ஸ்போர்ட் என்ற வார்த்தையின் சுருக்கமாக சி என்ற எழுத்து குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஜிடி எஸ் மற்றும் ஜிடி ஆர் ஆகிய மாடல்களுக்கு இடைப்பட்ட ஒன்றாக சி மாடல் இருக்கக் கூடும்.


மெர்சடைஸின் ஆவணங்களில் மெருகூட்டப்பட்ட எஸ் கிளாஸ் மாடல் மற்றும் ஆரம்ப நிலை ஜிஎல்ஏ - எஸ்யூவி மாடல் கார்களை அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்களின் கார்களுக்கு சவால் விடும் வகையில் வரவுள்ள மெர்சடைஸ் நிறுவனத்தின் புதிய மாடல் கார்களுக்காக நாமும் காத்திருப்போம்....

Most Read Articles
English summary
Mercedes To Launch 9 New Models In 2017.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X