புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

Written By:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மினி கார் நிறுவனம் புதிய பிரிமியம் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மிக அசாத்தியமான விலையில் வந்திருக்கும் இந்த புதிய பிரிமியம் வகை ஹேட்ச்பேக் கார் மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

மினி க்ளப்மேன் கார் மாடல்தான் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.37.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் கிடைக்கும். இந்த கார் ஒரேயொரு மாடலில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும்.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

மினி க்ளப்மேன் கார் 4,253மிமீ நீளமும், 1,800மிமீ அகலமும், 1,441மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,670மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. 360 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கையை மடக்கினால் இதன் பூட் ரூம் இடவசதியை 1,250 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மாற்ற முடியும்.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

சாதாரண மினி கார் மாடல்களின் சற்று நீளமான காராக இருக்கிறது. முன்புறத்தில் வழக்கம்போல் மினி கார் மாடல்களுக்கு உரிய வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்டுகள், கவர்ச்சிகரமான முகப்பு க்ரில் அமைப்பு, அழகான பம்பர் என கவர்கிறது. இந்த காரில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

முதல் தலைமுறை க்ளப்மேன் காரைப் போன்றே பக்கவாட்டில் திறக்கக்கூடிய இரண்டு பின்புற கதவுகள் கொண்டுள்ளது. கவர்ச்சிகரமான எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இரட்டை சைலென்சர்கள் பொருத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

உட்புறத்தில் பெரிய டயல் போன்ற 8.8 இன்ச் அளவுடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதற்கு கீழே இதர கட்டுப்பாட்டு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான ஆப்ஷன்களில் இன்டீரியர் வண்ணத்தை தேர்வு செய்து கொள்ள முடியும்.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரன் பிளாட் டயர்கள் என பாதுகாப்பு அம்சங்களில் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

இந்த காரில் 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. லிட்டருக்கு 13.84 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய மினி பிரிமியம் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 7.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 228 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக இதனை கூறலாம்.

English summary
Mini has launched the longest car in its range, the Clubman in India.
Story first published: Thursday, December 15, 2016, 15:02 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark