புதிய சாலை விதிகளின் கீழ் வகுக்கப்பட்டுள்ள கடுமையான தண்டனைகள் - ஓர் அலசல்

Written By: Krishna

என்னதான் சட்ட விதிகளைக் கடுமையாக்கினாலும், அதை மீறுவதில் இந்தியக் குடிமக்களுக்கு ஓர் அலாதி இன்பம். சாலைப் பாதுகாப்பு விவகாரத்திலும் அப்படித்தான். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர கடுமையான வாகனச் சோதனைகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாடு இல்லை.

இதனால், ஏற்படும் தொடர்ச்சியான உயிரிழப்புகள் வேதனை அளிக்கின்றன. மது அருந்தியவர் மட்டுமன்றி எதிர் திசையில் வாகனங்களில் வரும் அப்பாவி மக்களும் இந்த விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

இத்தகைய விதி மீறல்களைத் தடுக்க மத்திய அரசு கிடுக்கிப் பிடி போடத் திட்டமிட்டது. அதன்படி, புதிய விதிகளுடன் கூடிய சாலைப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள பல அதிரடி அம்சங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்;

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்;

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

ரேஷ் டிரைவிங்;

ரேஷ் டிரைவிங்;

வேகமாக வாகனம் ஓட்டினால், ரூ.1,000 முதல் 4 ஆயிரம் வரை அபராதம்.

ஹெல்மெட் போடாமல் இருத்தல்;

ஹெல்மெட் போடாமல் இருத்தல்;

லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் இல்லாவிடில் தனித்தனியே ரூ. 2 ஆயிரம் அபாரதம் மற்றும் 3 மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து என பல அதிரடி சட்ட விதிகள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இதைத் தவிர, சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வகை செய்யும் அம்சமும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹிட் அன்ட் ரன்;

ஹிட் அன்ட் ரன்;

இதைத் தவிர அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள சில சிறப்பம்சங்கள்...

ஹிட் அன்ட் ரன் முறையில் விபத்தை ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.

இறப்பு;

இறப்பு;

சாலை விபத்தில் இறந்தவருக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க ஏற்பாடு.

காப்பீடு இல்லாமல் இருந்தால்...

காப்பீடு இல்லாமல் இருந்தால்...

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2,000 அபராதம், 3 ஆண்டு சிறை.

சிறார்கள் மூலம் விபத்து;

சிறார்கள் மூலம் விபத்து;

18 வயதுக்கு குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், அவர்களது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு தண்டனை வழங்கப்படும்.

ரெஜிஸ்ட்ரேஷன்;

ரெஜிஸ்ட்ரேஷன்;

இந்திவாவில் உள்ள அனைத்து வாகனங்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளில் அனைத்து ஆவணங்களையும் ஒரு வட்டத்தின் கீழ் கொண்டு வர, டிரைவிங் லைசன்ஸுக்கான தேசிய பதிவு (National Register for Driving Licence) மற்றும் வாகன ரெஜிஸ்ட்ரேஷனுக்கான தேசிய பதிவு (National Register for Vehicle registration) உள்ளிட்டவை உருவாக்கப்படும்.

இந்த பணிகளானது, 'வாஹன்' மற்றும் 'சாரதி' பிளாட்ஃபார்ம் மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும், டிரான்ஸ்போர்ட் லைசன்ஸ் பணிகளை துரிதப்படுத்த டிரைவிங் டிரெய்னிங்கும் வழங்கப்படும்.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

இத்தகைய அதிரடி சீர்திருத்தங்களுடன் கூடிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது புதிய மைல்கல். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும் என்றார்.

இதுபோன்ற கடுமையான விதிகள் வகுப்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட... மத்திய அரசின் இந்த முடிவு பாராட்டுக்குரியது...

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பாதுகாபற்ற அனைத்து விதி மீறல்களுக்கும் கடுமையான தண்டனைகள் விரைவில்

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவாவிட்டால், இனி சிறை செல்ல நேரிடும்

உலகின் டாப் 15 பைக் பந்தய வகைகள் - சிறப்புத் தொகுப்பு!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Union Cabinet, headed by Prime Minister Narendra Modi approved the Motor Vehicle (Amendment) Bill 2016. As per this proposed Bill, there will be hefty penalties for traffic violation, including fine of Rs. 10,000 for drunk driving and Rs. 2 lakh for hit and run. Government has taken above steps to bring down number by 50 percent in next five years. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark