மெர்சிடிஸ் நிறுவனத்தின் மை மெர்சிடிஸ் - மை சர்வீஸ் விற்பனைக்கு பிந்தைய சேவை அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் நிறுவனம், மை மெர்சிடிஸ் - மை சர்வீஸ் ('My Mercedes - My Service') என்ற பெயரில் விற்பனைக்கு பிந்தைய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள மை மெர்சிடிஸ் - மை சர்வீஸ் சேவை திட்டம் மூலம், ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ், விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் புரட்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், சொகுசு கார் சந்தை கார் போட்டியில், தனித்து விளங்க முடிவு செய்துள்ளது.

my-mercedes-my-service-programs-introduced-in-india-now

இந்த புரட்சிகரமான விற்பனைக்கு பிந்தைய சேவை, 3 திட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் (Digital Service Drive), பிரிமியர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் (Premier Express Service), மற்றும் இன்னொவேட்டிவ் சர்வீஸ் புரோடெக்ட்ஸ் (innovative service products) ஆகியவற்றினால் சொகுசு கார் செக்மென்ட்டிலேயே, மெர்சிடிஸ் கார்கள் வைத்திருப்பது தான் கார் மிக அதிகமான உரிமை வசதியினை வழங்குகிறது.

மெர்சிடிஸ் நிறுவனம், அமெரிக்காவில் தான் டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் வசதியினை முதன் முதலாக வழங்கியது. இதற்கு அடுத்தப்படியாக, இந்தியா தான் டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் வசதி வழங்கப்படும் இரண்டாவது நாடாகும். டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் மூலம், இந்தியாவில் முதல் முறையாக, கார் உரிமையாளர்கள், வீடியோ கால்கள் மூலமாக சர்வீஸ் தொடர்பான முன்னேற்றங்களை பெற முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மெர்சிடிஸ் கார்களுக்கான சேவைகளை ஆன்லைனிலேயே புக்கிங் செய்து கொள்ள முடியும். மேலும், டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் மூலம், பிக்கப் மற்றும் டிராப்-பின் போது வாடிக்கையாளர்களுக்குகனேக்ட்டிவிட்டி கிடைக்கிறது. இத்தகைய வசதி சொகுசு கார் செக்மென்ட்டில் முதல் முறையாக வழங்கப்படுகிறது.

மெர்சிடிஸ் நிறுவனத்தின் இரண்டாவது திட்டமான பிரிமியர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் ('Premier Express Service'), மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளது போன்ற பிட்ஸ்டாப்-களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு குழு தலைவர் (டீம் லீடர்-Team leader) மற்றும் 2 சர்டிஃபைட் மெர்சிடிஸ் டெக்னீஷியன்கள், இந்த பிரத்யேக சர்வீஸ் சென்டர்களில் உள்ளனர். இவர்கள், பிரத்யேக பே-க்கள், 2 போஸ்ட் லிஃப்ட்கள் மற்றும் ஸ்பெஷலான டூல்கள் மற்றும் உபகரணங்கள் மூலம், காரின் முழு சர்வீஸ்-சையும் சுமார் 2 மணி நேரத்தில் மேற்கொள்ள முடியும். இது ஒரு மீட்டிங் அல்லது சினிமா பார்த்துவிட்டு வரும் நேரத்திற்கு மட்டுமே சமம் ஆகும்.

மெர்சிடிஸ் நிறுவனத்தின், 3-வது மற்றும் கடைசி திட்டம், பல்வேறு விதமான தேர்வுகளை உள்ளடக்கியுள்ளது. இதனால், மெர்சிடிஸ் கார்களை சொந்தமாக்கி கொள்வது மேலும் எளிமையாக மாறிவிடுகிறது. ஸ்டார் ஈஸ் நியூ சர்வீஸ் பேக்கேஜ் (Star Ease New Service Package) என்ற பெயரிலான இந்த திட்டம், ஒரு வருடத்திற்கு வெறும் 49,000 ரூபாய் என்ற வகையில் கிடைக்கிறது. இந்த சர்வீஸ் பேக்கேஜ்கள் மூலம், மெர்சிடிஸ் கார்களுக்கு 10 வருடங்கள் அல்லது 200,000 வரை இந்த சர்வீஸ்களை பெற்று கொள்ளலாம்.

my-mercedes-my-service-programs-introduced-in-india-recently

தற்போதைய மெர்சிடிஸ் கார் உரிமையாளர்களுக்கு, ஸ்டார் ஈஸ் காம்பேக்ட் சர்வீஸ் பேக்கேஜ் (Star Ease Compact service package) வழங்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 2 முதல் 5 வருடங்கள் அல்லது அன்லிமிடெட் மைலேஜ்-ஜுக்கான வசதி கிடைக்கிறது. ஸ்டார் ஈஸ் காம்பேக்ட் சர்வீஸ் புரோகிராம் (Star Ease Compact service program) தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள், 3 வருடம் அல்லது 30,000 கிலோமீட்டர் அல்லது 3 வருடம் அல்லது 60,000 கிலோமீட்டர், 4 வருடம் அல்லது 40,000 கிலோமீட்டர், 4 வருடம் அல்லது 80,000 கிலோமீட்டர் அல்லது 5 வருடம் அல்லது 1,00,000 கிலோமீட்டர் என்ற பல தேர்வுகளில் இருந்து, தங்களுக்கு பிடித்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் கார் சொந்தம் கொண்டாடும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் அல்லது மைலேஜ் அல்லது 4-ஆம் ஆண்டு ஆகியவற்றின் போது வரை, ஸ்டார் ஈஸ் காம்பேக்ட் (Star Ease Compact service) மற்றும் ஸ்டார் ஈஸ் காம்பேக்ட் ப்ளஸ் சர்வீஸ் (Star Ease Compact Plus) பேக்கேஜ்களை பெற்று கொள்ளலாம்.

இந்த 3 பெக்கேஜ்களும், நியூ பிரிமியர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் ('Premier Express Service') திட்டத்தை எந்த விதமான கட்டணமும் இல்லாமல் பெறலாம்.

Most Read Articles
English summary
German luxury carmaker Mercedes-Benz has launched 'My Mercedes - My Service' after sales program in India. With this new 'My Mercedes - My Service' after sales service program, Mercedes wants to revolutionize after-sales service. These revolutionary after sales program is based on three pillars: Digital Service Drive, Premier Express Service, and innovative service products. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X