புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் படங்கள் கசிந்தன!

Written By:

மாருதி ஸ்விஃப்ட் ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆம், புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட் காரின் படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் படங்கள் மற்றும் அதுகுறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் பார்க்கலாம்.

கசிந்துள்ள படங்கள்;

கசிந்துள்ள படங்கள்;

சுஸுகி டீலர்களுக்கான கூட்டம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்தது. இதையடுத்து, புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் படங்கள் கசிந்துள்ளது.

இந்த புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட், இந்த ஆண்டின் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபட திட்டமிடபட்டிருந்தது.

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட்...

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட்...

AutoExpress என்ற இணையதளத்தில் தான் இந்த படங்கள் கசிந்துள்ளது. இதில், புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் பல்வேறு சிறப்புகள் கொண்டவாறு தெரிகிறது.

ஸ்விப்ட் காரின் அடிப்படை ப்ரொஃபைலில் எந்த விதமான மாற்றங்களும் செய்யபடாமல் அப்படியே தான் தொடர்கிறது. ஆனால், இந்த புதிய சுஸுகி ஸ்விப்ட்

காருக்கு பெரிய ஹெக்ஸோகனல் (அறுங்கோண) கிரில் வழங்கபட்டுள்ளது. மேலும், ஃபாக் லேம்ப்களை சுற்றி பெரிய ஏர்-இண்டேக்குகளும், லேசாக மறுவடிவமைக்கபட்ட ஹெட்லேம்ப்களும் வழங்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் சி-பிள்ளர் கருமையாக்கபட்டுள்ளதால், இது ஃப்ளோட்டிங் ரூஃப் கொண்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

இதன் பின் பகுதியில் உள்ள கதவுகளின் ஹேண்டில்கள், ஜன்னலின் மேல் மூலையில் மறைக்கபட்டுள்ளது. டெய்ல்லேம்ப்களை போர்த்தியவாறு காட்சியளிக்கும் தனித்தன்மை கொண்ட அமைப்பு, பின்பக்கத்தில் கூடுதல் அழகை சேர்க்கிறது.

இதர அமைப்புகள்;

இதர அமைப்புகள்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் உட்பகுதியில் பிரிமியம் அமைப்புகள் வழங்கபட்டுள்ளது. இதற்கு புதிய ஸ்டீயரிங் வீல் வழங்கபட்டுள்ளது. இந்த ஸ்டீயரிங் வீல் பின்பகுதியில் 2 பாட் இன்ஸ்ட்ருமெண்ட் வழங்கபட்டுள்ளது.

மேலும், ஹெச்விஏசி-க்கான புதிய கண்ட்ரோல்களும், மத்தியில் வட்ட வடிவிலான ஏசி வெண்ட்களும் வழங்கபட்டுள்ளது.

இதன் செண்டர் கன்சோலில், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான டிஸ்பிளே வழங்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காருக்கு, பலேனோ ஆர்எஸ் மாடலில் உள்ள 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் உபயோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதோடு மட்டுமல்லாமல், வழக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகியவையும் உபயோகிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட், இந்தியாவில் 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட்: 2017ல் இந்தியாவில் ரிலீஸ்!

நாளை ரிலீசாகும் மாருதி ஸ்விஃப்ட் காரின் லிமிடேட் எடிசன் பற்றிய தகவல்கள்!!

ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Leaked images of new Maruti Suzuki Swift from a Suzuki dealers meet have revealed many things about new Maruti Suzuki Swift. It is to be launched formally this later this 2016. It has many latest and advanced features. Due to a darkened C-pillar, new Swift creates the illusion of a floating roof. To know more about new Maruti Suzuki Swift, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark